சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பா.ஜ., நிர்வாகி கொலையால் கடைகள் அடைப்பு; கெலமங்கலத்தில் உறவினர்கள் மறியல்

Added : செப் 17, 2020
Share
Advertisement

ஓசூர்: கெலமங்கலம் ஒன்றிய, பா.ஜ., இளைஞரணி தலைவர் கொலையில் தொடர்புடையவர்களை கைது செய்யக்கோரி, நேற்று காலை உறவினர்கள் சாலைமறியல் போராட்டம் நடத்தினர். கெலமங்கலம், தேன்கனிக்கோட்டையில் கடைகள் அடைக்கப்பட்டன.


கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அடுத்த குந்துமாரனப்பள்ளியை சேர்ந்தவர் ரங்கநாதன், 35; கெலமங்கலம் ஒன்றிய, பா.ஜ., இளைஞரணி தலைவராக இருந்தார். நேற்று முன்தினம் மாலை தன் இரண்டாவது மகன் தனுன்தயாசா பிறந்த நாளுக்கு, குந்துமாரனப்பள்ளியில் கேக் வாங்க சென்றார். அங்கு, பஸ் நிறுத்தம் அருகே, வட மாநில தொழிலாளி ஒருவர், கெலமங்கலத்தை சேர்ந்த சதீஷ் என்பவருடன், தன் பிறந்த நாளை கொண்டாடினார். இதற்கு, போத்தசந்திரத்தை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவிக்கவே, ரங்கநாதன் இரு தரப்பினரையும் சமாதானம் செய்தார். இதனால் ஆத்திரமடைந்த போத்தசந்திரத்தை சேர்ந்த சிலர், நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு, ரங்கநாதன் வீட்டிற்கு கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் சென்றனர். வீட்டிற்கு வெளியே நின்றிருந்த ரங்கநாதனை, அரிவாளால் வெட்டினர். இதை தடுக்க முயன்ற அவரது மனைவி கீதா, 25, மற்றும் அண்ணன் மஞ்சுநாத், 37, ஆகியோரையும் தாக்கினர். படுகாயமடைந்த ரங்கநாதன், கெலமங்கலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இந்நிலையில், நேற்று காலை, 7:00 மணிக்கு, கெலமங்கலம் சாலையில், அவரது உறவினர்கள் மற்றும் பா.ஜ.,வினர் மறியலில் ஈடுபட்டனர். ஏ.டி.எஸ்.பி., சக்திவேல் மற்றும் போலீசார், பா.ஜ., மாநில துணைத்தலைவர் நரேந்திரன், மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. ரங்கநாதன் கொலையால், கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி பகுதியில் நேற்று பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. கெலமங்கலம் இன்ஸ்பெக்டர் கமலேசன் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை நடக்கிறது. ரங்கநாதன் கொலையில், போத்தசந்திரத்தை சேர்ந்த தமிழரசன், 21, அம்ரீஷ், 20, ராஜேஷ், 23, சின்னராஜ், 22, தேவகுமார், 25, ராமு, 26, லட்சுமணன், 24, பிரகாஷ், 26, கூட்டூரை சேர்ந்த கிரி, 26, ஆகிய ஒன்பது பேர் தொடர்புடையவர்கள் என தெரியவந்துள்ளது. இதில், பிரகாஷிடம் விசாரித்து வரும் போலீசார், மற்றவகளை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X