பொது செய்தி

தமிழ்நாடு

பணிச்சுமை, தரமற்ற உணவு, தங்க இடமில்லை: அரசு மருத்துவமனை செவிலியர் போராட்டம்

Added : செப் 17, 2020
Share
Advertisement

சேலம்: பணிச்சுமை, தரமற்ற உணவு, தங்க இடமில்லை எனக்கூறி, அரசு மருத்துவமனை செவிலியர்கள், பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


சேலம் அரசு மருத்துவமனையில், நேற்று காலை, 7:00 மணிக்கு, பணிக்கு வந்த, செவிலியர்கள், திடீரென, பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, கொரோனா வார்டில் பணிபுரியும் செவிலியருக்கு, தங்க இடவசதி இல்லை, தரமற்ற உணவு வழங்குவதாக கூறி, கண்காணிப்பாளர் அலுவலகம் முன் திரண்டு, எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இதுகுறித்து, தமிழ்நாடு அரசு நர்ஸ்கள் சங்க மாநில துணைத்தலைவர் சுதா கூறியதாவது: விதிப்படி, எட்டு நோயாளிக்கு ஒரு செவிலியர் பணியமர்த்த வேண்டும். கொரோனா வார்டில், 80 நோயாளிக்கு, ஒருவர் பணிபுரியும் நிலை உள்ளது. தற்போது, ஓய்வு பெற்றவர் போக, 1,000 செவிலியருக்கு, 350 பேர் மட்டும் பணியில் உள்ளனர். சேலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை தொடங்கி, 10 ஆண்டுக்கு மேலாகியும், அதற்கான செவிலியர், 200 பேர் பணிஅமர்த்தப்படவில்லை. இதனால், கூடுதல் பணிச்சுமைக்கு ஆளாகி, மன உளைச்சலுக்கு தள்ளப்பட்டுள்ளோம். அரசு மருத்துவமனையில், கொரோனா சிகிச்சைக்கு, 2 வார்டுகள் உள்ளன. அங்கு, நான்கு ஷிப்டுகளில், 77 பேர் பணியில் உள்ளனர். அவர்களுக்கு, தங்குமிடம், உணவு வசதி செய்து கொடுக்காமல் அலைக்கழிக்கின்றனர். இதுதொடர்பாக, டீன், கலெக்டர், அமைச்சர், முதல்வர் வரை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. வேலைப்பளு தாங்க முடியாமல், பணி புறக்கணிப்பு செய்கிறோம். தொற்றால், 30 பேர் பாதிக்கப்பட்டு, விடுப்பில் சென்றனர். குறைந்தது, 100 பேராவது நியமித்தால், பணிச்சுமை ஓரளவு குறையும். அவசர தேவைக்கு, இ.எஸ்.ஐ., ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்களை, அயல்பணியாக, சேலம் அரசு மருத்துவமனையில் நியமித்து, பிரச்னையை தீர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். டீன் பாலாஜிநாதன் பேச்சுவார்த்தை நடத்தியதால், 2 மணி நேர போராட்டம் முடிவுக்கு வந்தது. இப்போராட்டத்தால், நோயாளிகள் பாதிக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X