பொது செய்தி

தமிழ்நாடு

கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளில் 10,500 கனஅடி உபரிநீர் திறப்பு

Added : செப் 17, 2020
Share
Advertisement

மேட்டூர்: கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளில், வினாடிக்கு, 10 ஆயிரத்து, 500 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.


மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி; கர்நாடகா அணைகளில் திறக்கப்பட்ட உபரிநீர், தமிழகம் - கர்நாடகா எல்லையில், தீவிரம் அடைந்த பருவமழையால், மேட்டூர் அணைக்கு, தொடர்ச்சியாக தண்ணீர் வருகிறது. நேற்று முன்தினம், வினாடிக்கு, 8,622 கனஅடியாக இருந்த, மேட்டூர் அணை நீர்வரத்து, நேற்று, 12 ஆயிரத்து, 894 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து பாசனத்துக்கு, 15 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. வரத்தை விட, திறப்பு கூடுதலாக இருந்ததால், நேற்று முன்தினம், 92 அடியாக இருந்த, அணை நீர்மட்டம், நேற்று, 91.78 அடியாக சரிந்தது. இந்நிலையில், நேற்று, கர்நாடகாவின் கே.ஆர்.எஸ்., அணையில், 8,000 கனஅடி, கபினியில், 2,500 கனஅடி வீதம், 10 ஆயிரத்து, 500 கனஅடி உபரிநீர் காவிரியில் வெளியேற்றப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X