தமிழ்நாடு

சேலம் - விருதாச்சலம் தடத்தில் 2வது ரயில்பாதை: முன்னுரிமை கொடுத்து அமல்படுத்த வலியுறுத்தல்

Added : செப் 17, 2020
Share
Advertisement

சேலம்: சேலம் - விருதாச்சலம் பாதையில், இரண்டாவது ரயில் பாதை அமைக்கும் திட்டத்துக்கு முன்னுரிமை வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது.


ரயில் போக்குவரத்தை அதிகரிக்க, ஏற்கனவே ஒரு ரயில் பாதை உள்ள தடங்களில், இரண்டாவது ரயில் பாதை அமைக்க, நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதில், சேலம் கோட்டத்தில், சேலம் -விருதாச்சலம், சேலம் - கரூர், ஈரோடு - கரூர், சேலம் - ஓசூர் தடங்களில், இரண்டாவது ரயில்பாதை அமைக்க, திட்ட அறிக்கை அனுப்பப்பட்டிருந்தது. அதில், தற்போது சேலம் - கரூர் இடையே, 85 கி.மீ., ஈரோடு - கரூர் இடையே, 65 கி.மீ., தூரத்துக்கு, இரண்டாவது ரயில் பாதை அமைக்க, ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்து, ஆய்வுக்கு நிதி ஒதுக்கியது. இதில், சேலம் - விருதாச்சலம் தடம் விடுபட்டுள்ளதால், சேலம் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து, தென்னக ரயில்வே ஆலோசனை குழுவின் முன்னாள் உறுப்பினர் ஹரிஹரண்பாபு கூறியதாவது: சேலம் - விருதாச்சலம் தடத்தில், இரண்டாவது ரயில் பாதை அமைத்தால், அந்த வழியே சேலம் -சென்னைக்கு பகல் நேர ரயில் உள்ளிட்ட பல ரயில்கள் இயக்க முடியும். சேலத்திலிருந்து கடலூர் துறைமுகத்துக்கு, சரக்குகளை நேரடியாக கொண்டு செல்ல முடியும். சின்னசேலம், தியாகதுருகம் வழியே திருவண்ணாமலைக்கும், ஆத்தூர், பெரம்பலூர் வழியே, அரியலூருக்கும் தடங்களை ஏற்படுத்தி, பயணியர் ரயில் இயக்க வாய்ப்பு ஏற்படும். இதனால், சேலம் மக்கள் சார்பில், பல ஆண்டாக, விருதாச்சலம் வரை, இரண்டாவது ரயில் பாதை அமைக்க வலியுறுத்தப்படுகிறது. தற்போது அறிவித்த திட்டங்களில், இது விடுபட்டுள்ளதால், ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. உடனே முன்னுரிமை அளித்து, சேலம் - விருதாச்சலம் இரண்டாவது ரயில் பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், ஓசூர் வரையான ஒற்றை தடத்தை, சேலம் ரயில்வே கோட்டத்துடன் இணைத்து, அதை, இரு வழியாக மாற்றுவதிலும், கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X