அரசு பள்ளியில் மரக்கன்றுகள் நடவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பள்ளியில் மரக்கன்றுகள் நடவு

Added : செப் 17, 2020
Share

கரூர்: உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு, கரூர், ஆண்டாங்கோவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் மரக்கன்றுகள் நடவு செய்யும் விழா நடந்தது. தலைமை ஆசிரியர் அலெக்சாண்டர் தலைமை வகித்தார். முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி மரக்கன்றுகளைநடவு செய்தார். மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் ஜெரால்டு, ஓசோன் குறித்து விளக்கம் அளித்தார். நல்லாசிரியர் விருது பெற்ற ஜெகதாபி அரசு மேல்நிலை பள்ளி ஆசிரியர் காமாட்சிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து ஓசோன் குறித்து, குறும்படம் காட்சிப்படுத்தப்பட்டது. வட்டார கல்வி அலுவலர் அசோகன் உட்பட பலர் பங்கேற்றனர்.



Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X