புறக்கடை கோழி வளர்ப்பு திட்டம்: 3,200 பயனாளிகளுக்கு வழங்க முடிவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புறக்கடை கோழி வளர்ப்பு திட்டம்: 3,200 பயனாளிகளுக்கு வழங்க முடிவு

Added : செப் 17, 2020
Share

கரூர்: 'புறக்கடை கோழி வளர்ப்பு திட்டத்தில், 80 ஆயிரம் கோழிக் குஞ்சுகள் வழங்கப்படவுள்ளன' என, கலெக்டர் அன்பழகன் தெரிவித்தார்.


இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்டத்தில் கோழி அபிவிருத்தி திட்டத்தின் கீழ், புறக்கடை கோழி வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில், ஒவ்வொரு ஒன்றியத்திற்கும், 400 பெண் பயனாளிகள் வீதம், 3,200 பயனாளிகளுக்கு மொத்தம், 80 ஆயிரம் கோழிக்குஞ்சுகள் வழங்கப்படவுள்ளன. இத்திட்டத்தில் தேர்வு செய்யப்படும் பயனாளிகள் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியவர்களாக இருக்க வேண்டும். ஆதரவற்ற பெண்கள், விதவை, மாற்றுத்திறனாளிகள் மற்றும் தமிழ்நாடு மாநில கிராமப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் சுய உதவிக்குழுவில் உள்ள உறுப்பினர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அரசு விதிமுறைகளின்படி, 30 சதவீதம் எஸ்.சி., - எஸ்.டி., பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர். மேலும், இலவச கறவை பசுக்கள், இலவச வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் மற்றும் கோழி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் முந்தைய ஆண்டுகளில் பயன் பெற்றவராக இருக்கக்கூடாது. இதற்கு, கால்நடை மருந்தகத்தில் உள்ள கால்நடை உதவி மருத்துவரிடம் விண்ணப்பம் அளிக்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X