யார் சொன்னாலும் திமுக கேட்காதே?

Updated : செப் 17, 2020 | Added : செப் 17, 2020 | கருத்துகள் (18)
Share
Advertisement
பேச்சுபேட்டிஅறிக்கை, முருகன், பீட்டர்அல்போன்ஸ், தினகரன், அழகிரி, உதயநிதிஸ்டாலின்,

நீட் விவகாரத்தில், தி.மு.க., மாணவர்களை பயமுறுத்துகிறது. தற்கொலை வேதனையானது தான். ஆனால், இதில் அரசியல் செய்வது அருவருக்கத்தக்கது. அரசியல் லாபத்திற்காக, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், மாணவர்களின் உயிரோடு விளையாடுகிறார்.-தமிழக, பா.ஜ., தலைவர் முருகன்


'யார் சொன்னாலும், தி.மு.க., கேட்க மாட்டேன் என்கிறதே...' என, கவலை தெரிவிக்கத் தோன்றும் வகையில், தமிழக, பா.ஜ., தலைவர் முருகன் பேட்டி



ஜெ., இல்லாத துணிச்சலில், இன்னும் எட்டு மாதங்களில், 'நாங்களே ஆளுங்கட்சி' என்று, தி.மு.க., பகல் கனவு கண்டுகொண்டிருக்கிறது. தி.மு.க.,வை, இந்த மண்ணில் திரும்பவும் தலையெடுக்க விடாமல் செய்யும் ஆற்றல், ஜெ.,வின் உண்மை பிள்ளைகளான நமக்கு தான் இருக்கிறது.-அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன்


'தி.மு.க., பகல் கனவு காண்கிறது என்பது உண்மையாக இருக்கலாம்; அதன் பின், நீங்கள் சொல்லும் வாசகம் தான், கற்பனையாக உள்ளது...' என, கிண்டலடிக்கத் தோன்றும் வகையில், அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை



பார்லிமென்டில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துள்ள மத்திய தொழிலாளர் துறை அமைச்சர், ஊரடங்கின் போது இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றிய விபரம் தன்னிடம் இல்லை என கூறியுள்ளது அவமானமானது.-காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பீட்டர் அல்போன்ஸ்


'இடம்பெயரும் தொழிலாளர் களின் பயணச் செலவை ஏற்போம் என கூறி, 'பல்டி' அடித்த, காங்கிரசிடம் இருந்தால், கொடுக்க வேண்டியது தானே...' என, காட்டமாக கூறத் தோன்றும் வகையில், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பீட்டர் அல்போன்ஸ் அறிக்கை



நீட் தேர்வை தடுக்கவும் மாட்டார்கள்; நீட்டால் இறந்த மாணவர் குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்லவும் மாட்டார்கள். தி.மு.க., சார்பில் நான் ஆறுதல் சொல்லப் போனால் மட்டும், 'அரசியல்' என்பர். பாதிக்கப்பட்டவர்களை பார்ப்பது அரசியல் என்றால், அந்த அரசியலை நான் தொடர்ந்து செய்வேன்.- தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலின்


'எப்படியாவது கைதாகி, அதன் மூலம், 'சிறை சென்ற சிங்கமே' என, கட்சியினர் கோஷமிட, வாய்ப்பு ஏற்படுத்த முயற்சிக்கிறீர்கள்...' என, கூறத் தோன்றும் வகையில், தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை



அ.தி.மு.க., அரசால், 'நீட்' தேர்வையும் தடுத்து நிறுத்த முடியவில்லை. அந்த தேர்வுக்கு, மாணவர்களை தயார்படுத்தவும் முடியவில்லை. தமிழக ஆட்சியாளர்களுக்கு உரிய பாடத்தை புகட்ட வேண்டியது அவசியம். தமிழக மக்கள், அ.தி.மு.க., அரசை மன்னிக்க மாட்டார்கள்.- தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி


latest tamil news




'இப்படி, மாணவர்களுக்கு எதிராக அரை வேக்காடு அறிக்கை அளிக்கும் காங்கிரசை தான், மக்கள் மன்னிக்க மாட்டார்கள்...' என, கூறத் தோன்றும் வகையில், தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி அறிக்கை

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
17-செப்-202018:25:11 IST Report Abuse
Endrum Indian நான் சொல்வதை நானே கேட்கமாட்டேன் - சுடலை ஜோசப் கான், பப்பு தி கிரேட்
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
17-செப்-202015:56:37 IST Report Abuse
sankaseshan வர வர அழகிரி அல்போன்சு திமுக நிதிகளின் புலம்பல் உளறல் தாங்க முடியலடா சாமி .
Rate this:
Cancel
Baskar - Paris,பிரான்ஸ்
17-செப்-202014:59:35 IST Report Abuse
Baskar கைகலப்பு காங்கிரஸ் தலைவரே நீட் தேர்வுக்கு கையெழுத்து போட்டது நம்ம தானே என்று மறந்து பேசுகிறீர்களா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X