ஊருக்குள் வர மறுக்கும் பஸ்கள்; அரவக்குறிச்சி பயணிகள் தவிப்பு

Added : செப் 17, 2020
Share
Advertisement

கரூர்: ஊருக்குள் வராமல் தேசிய நெடுஞ்சாலை பைபாஸ் வழியாக சேலம், மதுரை சென்று விடும் பஸ்கள் அரவக்குறிச்சி உள்ளே வந்து செல்ல அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


சேலம்- மதுரை தேசிய நெடுஞ்சாலை, அரவக்குறிச்சி அமைந்துள்ளது. இங்கிருந்து வணிகர்கள், அரசு அலுவலகங்களில் செல்பவர்கள் உட்பட பொதுமக்கள் தினசரி சேலம், திருச்சி, கோவை, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட ஊர்களுக்கு பல்வேறு அலுவல்கள், தொழில் தொடர்பாக சென்று வருகின்றனர். கரூர்- திண்டுக்கல் மார்க்கத்தில் சென்று வரும் பஸ்கள் மட்டும் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, மூன்று கி.மீ., அரவக்குறிச்சி நகருக்குள் வந்து செல்கின்றன. அரவக்குறிச்சி வழியாக செல்ல வேண்டும் என, உத்தரவு இருந்தும் கூட, மற்ற பஸ்கள் நகருக்குள் வராமல் தேசிய நெடுஞ்சாலையில் பைபாஸ் வழியாக சென்று விடுகின்றன. தற்போது, கொரோனா தொற்று பரவல் ஊரங்கு உத்தரவு தளர்வு காரணமாக பஸ் போக்குவரத்து தொடங்கிய நிலையில், பயணிகளின் எண்ணிக்கைக்கேற்ப பஸ்கள் போதுமானதாக இல்லாமல் இருக்கிறது. இதனால், சமூக விலகல் இல்லாமல் பயணிகள் செல்லும் ஆபத்தான நிலை உள்ளது. மேலும், சேலம், மதுரை போன்ற நீண்ட தூரம் செல்லும் பயணிகளுக்கு, நேரடி பஸ் வசதி இல்லாததால் கரூர் மற்றும் திண்டுக்கல் சென்று பஸ் மாற்றி செல்ல வேண்டும். இதனால், குடும்பத்துடன் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் சுமைகளுடன் செல்லும் பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே, பஸ்கள் அரவக்குறிச்சி உள்ளே வந்து செல்ல அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X