பொது செய்தி

தமிழ்நாடு

நிலக்கடலை அறுவடை பணிகள் மும்முரம்

Added : செப் 17, 2020
Share
Advertisement

மல்லசமுத்திரம்: திருச்செங்கோடு சுற்றுவட்டார பகுதிகளில், நிலக்கடலை அறுவடை பணி மும்முரமாக நடந்து வருகிறது. திருச்செங்கோடு சுற்றுவட்டார பகுதிகளான மல்லசமுத்திரம், வையப்பமலை, ராமாபுரம், எலச்சிபாளையம், குமரமங்கலம், மாணிக்கம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மே மாதத்தில் நிலக்கடலைசெடி விதைப்பது வழக்கம். தொடர்ந்து, ஜூ ன்மாதத்தில் பூ பூக்கும் தருணத்தில் முதல் களை, ஆகஸ்ட் மாதத்தில் இரண்டாம் களையும் எடுப்பது வழக்கம். தொடர்ந்து, செப்டம்பர் மாதத்தில் அறுவடை செய்வர். அதன்படி தற்போது, நிலக்கடலை செடி அறுவடை செய்யும் பணி மும்முரமாக நடக்கிறது. இதுகுறித்து, கருங்கல்பட்டியை சேர்ந்த விவசாயி செல்வம் கூறியதாவது: நிலக்கடலை செடியானது, ஐந்து மாத பயிர். ஏக்கருக்கு, 40 கிலோ விதைக்கப்படும். அறுவடைகாலத்தில், 20 முதல், 25 மூட்டைகள் எதிர்பார்க்கலாம். கிலோ, 45 முதல், 50 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X