பொது செய்தி

தமிழ்நாடு

வரும் 21ல் தனித்தேர்வுகள் தொடக்கம்: ஹெச்.எம்.,களுக்கு ஆலோசனை கூட்டம்

Added : செப் 17, 2020
Share
Advertisement

நாமக்கல்: எட்டாம் வகுப்பு, எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 1, பிளஸ் 2 மற்றும் துவக்கக் கல்வி பட்டயத் தேர்வுகளில் தோல்வியுற்றவர்களுக்கான தனித்தேர்வுகள் வரும், 21ல் துவங்கி அக்.,7 வரை நடைபெறுகின்றன. நாமக்கல் மாவட்டத்தில், 12 மையங்களில், 1,498 பேர் எழுதுகின்றனர். இந்த தேர்வுகளின் கண்காணிப்பாளர்களாக தலைமையாசிரியர்கள், 50க்கும் மேற்பட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன், மாவட்ட கல்வி அலுவலர் கபீர், அரசு தேர்வுகள் துறை உதவி இயக்குனர் ராதா கிருஷ்ணன் ஆகியோர் ஆலோசனை வழங்கினர். மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில், துவக்க கல்வி பட்டயத் தேர்வுகள் நடைபெறுகின்றன. இம்மையத்தில், 120 பேர், நாமக்கல் செல்வம் பள்ளியில், எட்டாம் வகுப்பு தேர்வை, 123 பேர், எஸ்.எஸ்.எல்.சி., பழைய பாட முறையிலான தேர்வை, ராசிபுரம் நேஷனல் பள்ளியில், 222 பேர், வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு பள்ளியில், 178 பேர், புதிய பாடப்பிரிவு முறையில், மல்லசமுத்திரம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 91 பேர், பாச்சல் பாவை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், 98 பேர் எழுதுகின்றனர். பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வை, பழைய பாட முறையில் நாமகிரிப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மையத்தில், 117 பேர், புதிய பாட முறையில், நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 115 பேர், தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 130 பேர், ரெட்டிப்பட்டி பாரதி மேல்நிலைப்பள்ளியில், 70 பேர் எழுதுகின்றனர். மேலும், திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 132 பேர், வெண்ணந்தூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 102 பேர் என மொத்தம், 1,498 பேர் தனித்தேர்வை எழுத உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X