பொது செய்தி

தமிழ்நாடு

'108' ஆம்புலன்ஸ் பணி: 65 பேருக்கு நியமன ஆணை

Added : செப் 17, 2020
Share
Advertisement

நாமக்கல்: நாமக்கல்லில், '108' ஆம்புலன்ஸ் பணிக்கான நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு, 65 பேருக்கு நியமன ஆணை வழங்கப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில், '108' ஆம்புலன்சில் பணியாற்ற, நேற்று, நாமக்கல்-திருச்சி சாலை, அம்மா உணவகம் அருகே செயல்படும், '108' ஆம்புலன்ஸ் அலுவலகத்தில் நேர்முகத்தேர்வு துவங்கியது. 150 பேர் பங்கேற்றனர். அவர்களுக்கு, 'இன்ப்ரா ரெட் தெர்மா மீட்டர்' முலம் வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கிருமி நாசினியும், முக கவசமும் வழங்கப்பட்டு சமூக இடைவெளியில் அமரவைக்கப்பட்டனர். அவர்களிடம் மண்டல மேலாளர் குமரன், மண்டல வாகன பராமரிப்பு மேலாளர் பிரதீப்குமார், சேலம், நாமக்கல் மாவட்ட அலுவலர்கள் கொண்ட குழுவினர் நேர்முகத்தேர்வு நடத்தினர். அதில், டிரைவர்களுக்கான தேர்வில், 40 பேரும், மருத்துவ உதவியாளர் பணிக்கு, 25 பேரும் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. அவர்களுக்கு, சென்னையில் பயிற்சி வழங்கப்பட்டு பணியில் அமர்த்தப்படுவர் என, அலுவலர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X