பொது செய்தி

தமிழ்நாடு

மற்ற மாவட்டங்களுக்கு முன் மாதிரியாக 'போஷன் மா' திட்டம்: கலெக்டர் பேச்சு

Added : செப் 17, 2020
Share
Advertisement

நாமக்கல்: ''அனைத்து பள்ளிகளிலும் ஊட்டச்சத்து தோட்டம் அமைத்து, மற்ற மாவட்டங்களுக்கு முன் மாதிரியாக, 'போஷன் மா' திட்டம் செயல்படுத்தப்படும்,'' என, கலெக்டர் மெகராஜ் பேசினார்.


நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், சமூக நலன் மற்றும் சத்துணவுத்திட்டத்துறை சார்பில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப்பணிகள், 'போஷன் அபியான்' திட்டத்தின் கீழ், 'போஷன் மா' குறித்து, மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது.

கலெக்டர் மெகராஜ் பேசியதாவது: 'போஷன் மா' திட்டம் சம்பந்தமாக, தொடர்ந்து, 20 நாட்களுக்கு, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். அனைத்து ஊராட்சிகளிலும், குறைந்தது, இரண்டு ஊட்டச்சத்து தோட்டம் அமைக்கப்படும். தண்ணீர் வசதி உள்ள கூட்டுறவு சங்கங்களில், ஊட்டச்சத்து தோட்டம் அமைக்க வேண்டும். 40 சதவீத பள்ளிகளில், பசுமை படை மாணவர்கள் அமைப்பின் மூலம், ஊட்டச்சத்து தோட்டம், மூலிகை தோட்டம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள அனைத்து பள்ளிகளிலும், ஊட்டச்சத்து தோட்டம் அமைக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு, மற்ற மாவட்டங்களுக்கு, முன் மாதிரியாக இத்திட்டம் செயல்படுத்தப்படும். இவ்வாறு, அவர் பேசினார். தொடர்ந்து, நாமக்கல் ஒன்றிய அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், ஊட்டச்சத்து குறைபாடுகள் உள்ள, 10 குழந்தைகளுக்கு, ஊட்டச்சத்து தொகுப்புகளை, கலெக்டர் மெகராஜ் வழங்கினார். மாவட்ட சமூக நல அலுவலர் கீதா, குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜான்சிராணி உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X