பொது செய்தி

தமிழ்நாடு

திடக்கழிவு மேலாண் விதிகளை மீறினால் அபராதம்: கமிஷனர்

Added : செப் 17, 2020
Share
Advertisement

நாமக்கல்: 'திடக்கழிவு மேலாண் விதிகளை மீறும் வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்' என, நாமக்கல் நகராட்சி கமிஷனர் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.


அவரது அறிக்கை: நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள், விடுதிகள், அடுக்குமாடி குடியிருப்புகள், குடியிருப்போர் நலச்சங்கம், சந்தை சங்க உறுப்பினர்கள் ஆகிய பகுதிகளில், தினசரி உருவாகும் திடக்கழிவுகள், 100 கிலோவிற்கு அதிகமாக இருப்பின், திடக்கழிவுகளை உருவாக்குபவர்கள், சொந்த பொறுப்பில் மட்கும் குப்பையை தரம் பிரித்து தங்கள் வளாகத்தில் அல்லது தகுதியான இடத்தில், கட்டமைப்பு ஏற்படுத்தி மட்கும் குப்பையை இறுதியாக செய்திட (உரம் தயாரிக்க)வசதிகள் ஏற்படுத்த வேண்டும். இதுகுறித்து, நகராட்சி மூலம் பல்வேறு கூட்டங்கள் நடத்தப்பட்டன. நிறுவனங்கள் அக்., 31க்குள் தங்கள் சொந்த பொறுப்பில் மட்கும் குப்பையை இறுதி ஆக்கம் செய்ய வேண்டும். 100 கிலோவிற்கு குறைவாக மட்கும் குப்பையை உருவாக்குபவர்கள் அக், 15ம் தேதிக்குள் நகராட்சி கமிஷனருக்கு எழுத்து மூலம் தெரிவிக்க வேண்டும். தவறினால் தாங்கள் நிறுவனத்தை, 100 கிலோவுக்கு அதிகமாக உற்பத்தி செய்து வருபவராக கருதப்படும். அவ்வாறு சுய அறிவிப்பு செய்யும் விபரத்தை, நகராட்சி மூலம் சரிபார்க்கப்பட்டு தவறு இருப்பின், 500 ரூபாய் அபராதம்; மேலும், திடக்கழிவு மேலாண் விதிகளை மீறுபவர்கள் மீது, 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X