பொது செய்தி

தமிழ்நாடு

சிறுபான்மையின கைவினை கலைஞர்களுக்கு கடனுதவி

Added : செப் 17, 2020
Share
Advertisement

நாமக்கல்: 'சிறுபான்மையின கைவினை கலைஞர்களுக்கு கடனுதவி வழங்கப்படுகிறது' என, நாமக்கல் கலெக்டர் மெகராஜ் தெரிவித்துள்ளார்.


அவரது அறிக்கை: தமிழகத்தில் உள்ள முஸ்லிம், கிறிஸ்தவர், ஜெயின், சீக்கியர், பார்சி, புத்தமதத்தை சேர்ந்த கைவினைக் கலைஞர்கள், தங்கள் தொழிலுக்கு தேவையான மூலதன பொருட்களை வாங்கி, தொழிலில் முன்னேற்றம் அடைய உதவும் வகையில், தமிழக சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம், கடனுதவி வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ், கடனுதவி பெற விரும்பும் கைவினை கலைஞர்களின் ஆண்டு வருமானம், கிராமப்புறத்தில், 98 ஆயிரம் ரூபாய், நகர்ப்புறத்தில், 1.20 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். அதிகபட்ச கடன் தொகை, 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும். ஆண் பயனாளிகளுக்கு, ஐந்து சதவீதம் மற்றும் பெண் பயனாளிகளுக்கு, நான்கு சதவீதம் வட்டி விகித்தில் கடனுதவி வழங்கப்படும. கடனை, ஐந்து ஆண்டுகளுக்குள் திரும்ப செலுத்த வேண்டும். பயன்பெற விரும்புவோர், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகி விண்ணப்பிக்கலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X