பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தொற்று குறைவால் நிம்மதி

Added : செப் 17, 2020
Share
Advertisement

பள்ளிபாளையம்: பள்ளிபாளையத்தில், கொரோனா தொற்று குறைந்து வருவதால், பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். பள்ளிபாளையம் நகராட்சியில், 21 வார்டுகளிலும் நெருக்கடி அதிகம். மக்கள் நடமாட்டம் எப்போதும் இருக்கும். கொரோனா தொற்று பரவலை தடுக்க, நகராட்சி மூலம் பலவேறு சுகாதாரம், தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆரம்பத்தில் பெரியளவு பாதிப்பு இல்லை. கடந்த ஜூலை இறுதி மற்றும் ஆகஸ்ட் துவக்கத்தில் கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். இதனால், தொற்று அதிகரித்திருந்த ஒன்பது வார்டுகள் முழுமையாக, 14 நாட்கள் தடைசெய்யப்பட்டன. கொரோனா தொற்றை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள், மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. கடந்த சில நாட்களாக பாதிப்பு வேகமாக குறைந்து விட்டதால், பொதுமக்கள் நிம்மதிடைந்துள்ளனர். இதுகுறித்து. கமிஷனர் இளவரசன் கூறுகையில், ''சில நாட்களாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து விட்டது. நேற்று முன்தினம் யாரும் இல்லை. நேற்று ஒருவர் மட்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X