பொது செய்தி

தமிழ்நாடு

மேலும் 120 பேருக்கு கொரோனா தொற்று: பாதிப்பு எண்ணிக்கை 3,673ஆக உயர்வு

Added : செப் 17, 2020
Share
Advertisement

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், இரண்டு போலீசார் உள்பட நேற்று, ஒரே நாளில், 120 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.


நாமக்கல் மாவட்டத்தில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது, மாவட்ட மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், நாமக்கல், ராசிபுரம், பள்ளிபாளையம், குமாரபாளையம், திருச்செங்கோடு, ப.வேலூர், புதுச்சத்திரம், சேந்தமங்கலம், குருசாமிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள், கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்ததால், பாதிக்கப்பட்டனர். அதேபோல், ஈரோடு, திருச்சி, சேலம், கரூர், கோவை மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு சென்று வந்தவர்களுக்கு பரிசோதனை செய்ததில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, நேற்று, ஒரே நாளில், 120 பேர் பாதிக்கப்பட்டனர். அதன் மூலம், மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 3,673 ஆக உயர்ந்தது. நேற்று, சிகிச்சையில் குணமடைந்து 70 பேர் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். இதுவரை, 2,698 பேர் குணமடைந்த வீட்டுக்கு சென்றுள்ளனர். சிகிச்சை பலனின்றி, நேற்று, ஒருவர் உயிரிழந்தார். அதன் மூலம், மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 53ஆக உயர்ந்துள்ளது. தற்போது, 922 பேர், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்துப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X