பொது செய்தி

தமிழ்நாடு

இலவச கறவை பசு வழங்கும் திட்டம்: 400 பயனாளிகளை தேர்வு செய்ய முடிவு

Added : செப் 17, 2020
Share
Advertisement

நாமக்கல்: தமிழக முதல்வரின், இலவச கறவைப்பசுக்கள் வழங்கும் திட்டம், 2020-21ம் ஆண்டில், நாமக்கல் மாவட்டத்தில் செயல்படுத்த தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும், நவ., முதல், 2021, ஜன., வரை, எட்டு கிராமங்களில், 400 பசுக்கள் வழங்கப்படுகின்றன. அதில், நவ., மாதம், வெண்ணந்தூர் ஒன்றியம், கீழூர், ராசிபுரம் ஒன்றியம், பொன்குறிச்சி, பரமத்தி ஒன்றியம், பிள்ளைக்களத்தூர் ஆகிய கிராமங்களில், தலா, 50. டிச.,ல், சேந்தமங்கலம் ஒன்றியம், பெரியகுளம், நாமக்கல் ஒன்றியம், மாரப்பநாயக்கன்பட்டி, நாமகிரிப்பேட்டை ஒன்றியம், பெரப்பன்சோலை ஆகிய கிராமங்களில், தலா, 50. ஐன., 2021ல், சேந்தமங்கலம் ஒன்றியம், பள்ளிப்பட்டி, புதுச்சத்திரம் ஒன்றியம், பாச்சல் ஆகிய கிராமங்களில், தலா, 50 என, மொத்தம் 400 அலகுகள் வழங்கப்பட உள்ளன. திட்டம் செயல்படுத்தப்படும், சிறப்பு கிராம சபா கூட்டம், நவ., டிச.,ல் செயல்படுத்தப்படும் கிராமங்களுக்க, வரும், 24லும், 2021, ஜன., மாதம் செயல்படுத்தப்படும் கிராமத்துக்கு, வரும், 25லும் நடத்தப்படுகிறது. இரண்டாம் கிராம சபா, அக்., 2, 5ல், நடத்தப்பட்டு, பயனாளிகள் தேர்வு இறுதி செய்யப்படும். இத்திட்டத்தில் பயனடையும் பயனாளிகள், பெண் பயனாளிகளாக இருக்க வேண்டும். பெண்களின் சிறப்பு பிரிவினரான விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோர், மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இவ்வாறு, கலெக்டர் மெகராஜ் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X