சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மொபட் - பைக் மோதல்: விபத்தில் விவசாயி பலி

Added : செப் 17, 2020
Share
Advertisement

நாமக்கல்: லாரியை முந்தி சென்றபோது ஏற்பட்ட விபத்தில், படுகாயம் அடைந்த விவசாயி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தில் அடிபட்ட நபரை ஏற்றி சென்ற ஆம்புலன்ஸ் கவிழ்ந்ததில், டிரைவர் படுகாயம் அடைந்தார்.


மோகனூர் ஒன்றியம், ஆண்டிப்பாளையத்தை சேர்ந்தவர் தங்கவேல், 38. விவசாயியான அவர், நேற்று, காலை, 10:00 மணிக்கு, ?ஹாண்டா ஆக்டிவா மொபட்டில், பரமத்தியில் இருந்து, நாமக்கல் நோக்கி வந்து கொண்டிருந்தார். அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே, முன்னாள் சென்ற லாரியை, 'ஓவர் டேக்' செய்துள்ளார். அப்போது எதிரே, பெருமாப்பட்டியை சேர்ந்த கோகுல்நாத், 19 என்பவர் ?ஹாண்டா ?ஷன் பைக்கில் வந்துள்ளார். இரு வாகனங்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. படுகாயம் அடைந்த தங்கவேல், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த கோகுல்நாத், தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆம்புலன்ஸ்சை, லத்துவாடியை சேர்ந்த சரத், 23 என்பவர் ஓட்டி வந்தார். தமிழக மின்வாரிய அலுவலகம் அருகே, சாலையின் குறுக்கே, ஒருவர் திடீரென வந்துள்ளார். அதிர்ச்சியடைந்த ஆம்புலன்ஸ் டிரைவர் பிரேக் அடித்ததில், ஆம்புலன்ஸ் வேன், தலைகீழாக கவிழ்ந்தது. அதில், டிரைவர் சரத் படுகாயம் அடைந்தார். அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாமக்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X