நடைபாதை மேம்பாலம் அமைக்கப்படுமா?| Dinamalar

நடைபாதை மேம்பாலம் அமைக்கப்படுமா?

Added : செப் 17, 2020
Share

பள்ளிபாளையம்: வெப்படையில், நடைபாதை மேம்பாலம் அமைக்க, கோரிக்கை எழுந்துள்ளது. பள்ளிபாளையம் அருகே, வெப்படை பஸ் நிறுத்தத்தில் நான்கு பிரதான சாலைகள் சந்திக்கின்றன. தொடர்ச்சியாக வாகனங்கள் வந்து கொண்டிருக்கும். போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், விபத்தை தடுக்கவும் சில ஆண்டுகளுக்கு முன், இங்கு சாலையை விரிவுபடுத்தி, சென்டர் மீடியன் வைக்கப்பட்டது. தொடர்ச்சியாக வாகனங்கள் வருவதால், சாலையை கடக்கும் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். வயதானவர்கள், மற்றவர்கள் துணையுடன் தான் செல்ல வேண்டும். இல்லையெனில், அவர்கள் விபத்தில் சிக்கிக் கொள்ளும் நிலை ஏற்படுகிறது. பல சமயங்களில் விபத்தும் நடந்துள்ளது. முக்கியமான சாலை பிரிவாக உள்ளதால், நடைபாதை மேம்பாலம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X