பல்லாங்குழி சாலை; வாகன ஓட்டிகள் பாதிப்பு

Added : செப் 17, 2020
Share
Advertisement

எலச்சிபாளையம்: சின்னதம்பிபாளையத்தில் குண்டும், குழியுமாக காட்சிளிக்கும் சாலையால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். திருச்செங்கோடு அடுத்த, சின்னதம்பிபாளையம் பஸ் நிறுத்தத்தில் இருந்து, ஆதிதிராவிடர் தெரு செல்லும் சாலையில் தினமும், ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இச்சாலை குண்டும், குழியுமாக காட்சியளிப்பதால், வாகனஓட்டிகள் சிரமப்படுன்றனர். சற்றுவேகமாக சென்றால்கூட, கீழே விழுந்து காயங்கள் ஏற்பட்டு செல்லும் சம்பவம் அடிக்கடி அரங்கேறுகிறது. சாலையை சரி செய்யக்கோரி, பகுதி மக்கள் பலமுறை அதிகாரிகளிடத்தில் முறையிட்டும் இதுவரை நடவடிக்கை இல்லை. சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X