பொது செய்தி

இந்தியா

'யப்' டிவியில் டிரீம் 11 ஐபில் 2020

Added : செப் 17, 2020
Share
Advertisement
IPL, IPL2020, YUPPTV,

தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய ஓடிடி பிளாட்பார்மான 'யப்' டிவியில் ஐபிஎல் 2020 போட்டிகள் நேரலையில் வர இருக்கிறது.

உலகில் எவ்வளவோ நாடுகளில் கிரிக்கெட் போட்டிகள் நடந்தாலும் இந்தியாவிலும் நடக்கும் ஐபிஎல்., போட்டிகள் என்று சொல்லுவதை விட திருவிழாவாகத்தான் ரசிகர்கள் பார்க்கிறார்கள். கிட்டத்தட்ட 2 மாதங்கள் ரசிகர்களுக்கு இது கொண்டாட்டம் தான். அதன்படி 13வது ஐபிஎல்., கிரிக்கெட் போட்டிகள் கொரோனா பிரச்னையால் இந்தாண்டு துபாயில் நடக்கிறது. செப்., 19ம் தேதி முதல் நவ., 10 வரை நடைபெற உள்ள இந்த போட்டிகளை காண ரசிகர்கள் ஆவலாய் உள்ளனர்.

இந்நிலையில் தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய ஓடிடியான யப் டிவியில் இம்முறையும் ஐபிஎல்., போட்டிகள் ஒளிபரப்பாகின்றன. மொத்தம் 60 போட்டிகள் கொண்ட இந்த கிரிக்கெட் திருவிழாவை ஆஸ்திரேலியா, ஐரோப்பியா, மலேசியா, சிங்கப்பூர் தவிர்த்து தென்கிழக்கு ஆசிய நாடுகள், இலங்கை, பூட்டான், மாலதீவு, மத்திய ஆசியா, மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் உள்ளவர்கள் வீட்டில் இருந்தபடியே 'யப்' டிவியில் கண்டு மகிழலாம். இதற்காக மிகப்பெரிய அளவில் விளம்பரங்களும் செய்யப்பட்டு வருகின்றன.

"கடந்த சில ஆண்டுகளாகவே ஐபிஎல்., கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் மிகவும் விரும்பி பார்க்கப்படும் ஒரு விளையாட்டாக உள்ளது. அதிலும் இப்போதுள்ள கொரோனா பிரச்னையில் மக்கள் வெளியே செல்லவே பயப்படும் நிலையில் ஐபிஎல்., போட்டிகளை வீட்டில் இருந்தபடி பாதுகாப்பாக மிகத்துல்லியமாக, நவீன தரத்தில் போட்டிகளை எங்களது யப் டிவியில் ரசிகர்கள் பார்த்து மகிழலாம்" என்கிறார் இந்நிறுவனத்தின் சிஇஓ., உதய் ரெட்டி.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X