பொது செய்தி

தமிழ்நாடு

அரசு மருத்துவ கல்லூரியில் கூடுதல் கட்டணம் வசூல் என குற்றச்சாட்டு

Added : செப் 17, 2020
Share
Advertisement

ஈரோடு: ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரியில், மாணவர்களிடம் இருந்து கூடுதல் கட்டணம் வசூலிப்பதற்கு, தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.


தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்க பொதுச் செயலாளர் ஹரிகணேஷ், தமிழக அரசுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஈரோடு மாவட்டம், பெருந்துறை ஐ.ஆர்.டி., மருத்துவக் கல்லூரியை சாலை மற்றும் போக்குவரத்து கழகத்திடம் இருந்து, தமிழக அரசு கையகப்படுத்தி, ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரியாக மாற்றி அமைத்து, கடந்த இரண்டு ஆண்டாக நடத்துகிறது. அரசின் நடவடிக்கையால், ஈரோடு மாவட்டம் மற்றும் சுற்றியுள்ள மக்கள் பெரிதும் பயனடைவர் என, எதிர்பார்த்தோம். ஆனால், அரசு கையகப்படுத்திய பிறகும், கல்லூரி கட்டணத்தை மாற்றி அமைக்காமல் உள்ளது. அங்கு படிக்கும் மாணவர்கள், பழைய கட்டணமான, ஆண்டுக்கு ஐந்து லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என்று, நிர்பந்தம் செய்கிறது. பிற அரசு மருத்துவக் கல்லூரிகளின் கல்வி கட்டணமும், ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரியின் மருத்துவ கட்டணத்திலும் பெரிய அளவில் வேறுபாடு உள்ளது. ஈரோடு மருத்துவக் கல்லூரி, நவீனமாகவும், உயர் அமைப்புடன் செயல்படும் கல்லூரி என, தமிழக அரசு கூறி இருப்பது வருத்தம் அளிக்கிறது. எனவே, தமிழகத்தில் உள்ள, பிற அரசு மருத்துவக் கல்லூரிகளில் வசூலிக்கப்படும், அதே கட்டணத்தை இங்கும் வசூலிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X