பொது செய்தி

தமிழ்நாடு

'தி.மு.க., ஒவ்வொரு நாளும் தேய்ந்து வருகிறது'

Added : செப் 17, 2020
Share
Advertisement

ஆத்தூர்: ''உதயநிதியை முன்னிலைப்படுத்திய பின், தி.மு.க., ஒவ்வொரு நாளும் தேய்ந்து வருகிறது,'' என, பா.ஜ., மாநில துணைத்தலைவர் துரைசாமி கூறினார்.


இன்று, பிரதமர் நரேந்திரமோடி பிறந்த நாள் விழாவை கொண்டாவது குறித்த ஆலோசனை கூட்டம், சேலம் கிழக்கு மாவட்ட, பா.ஜ., நிர்வாகிகள் சார்பில், ஆத்தூரில், நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார். பின்னர், பா.ஜ., மாநில துணைத் தலைவர் துரைசாமி, நிருபர்களிடம் கூறியதாவது: அனைவரும் கல்வி கற்கும் அடிப்படையில், ஐந்தாம் வகுப்பு வரை, தாய் மொழியில் படிக்கலாம் என, புது கல்வி கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அளவில், வேறு எந்த மாநிலத்திலும் இல்லாதபடி, தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள், ஹிந்தியை மட்டும் தான் படிக்க கட்டாயப்படுத்துவது போன்று, பொய் தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர். தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், 'நீட்' தேர்வை ரத்து செய்வதாக, பொய் வாக்குறுதியை ஸ்டாலின் கூறுகிறார். சட்டசபையில், அத்தேர்வு குறித்து, முதல்வர் பழனிசாமி பேசும்போது, ஸ்டாலின் ஏன் மவுனம் காத்தார். இத்தேர்வை வைத்து, தி.மு.க., அரசியல் செய்ய முடியாது. அ.தி.மு.க.,வில் தற்போதுள்ள கூட்டணி, வரும் சட்டசபை தேர்தலில் தொடரும். எத்தனை இடங்களில், பா.ஜ., போட்டியிடும் என, தேர்தலின்போது அறிவிக்கப்படும். உதயநிதி, ஏ.வ.வேலுவை முன்னிலைப்படுத்திய பின், தி.மு.க., ஒவ்வொரு நாளும் தேய்ந்து கொண்டே வருகிறது. அக்கட்சியில் இருந்து, அதிகளவில் பா.ஜ.,வுக்கு வருகின்றனர். இதனால், பா.ஜ., வளர்ந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X