சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமியை கடத்திய தொழிலாளி: போக்சோவில் கைது

Added : செப் 17, 2020
Share
Advertisement

வேலூர்: வேலூர் அருகே, சிறுமியை பெங்களூருக்கு கடத்திய தொழிலாளி, போக்சோவில் கைது செய்யப்பட்டார். வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த ஆசனாம்பட்டை சேர்ந்த, 16 வயது சிறுமியை, அதே பகுதியை சேர்ந்த, கட்ட தொழிலாளி ஜெயபிரதாப், 21, என்பவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, கடந்த, 12ல் பெங்களூருக்கு கடத்திச்சென்று பலாத்காரம் செய்துள்ளார். சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகார்படி, பெங்களூருவிலிருந்து இருவரையும் மீட்டு, நேற்று வேப்பங்குப்பம் போலீசார், ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர். சிறுமியை கடத்திய ஜெயபிரதாப்பை, போக்சோவில் போலீசார் கைது செய்தனர். மருத்துவ பரிசோதனைக்கு பிறகு, வேலூர் பெண்கள் காப்பகத்தில் சிறுமி ஒப்படைக்கப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X