சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பேரூராட்சி செயல் அலுவலர் வீட்டில் 'ரெய்டு'

Added : செப் 17, 2020
Share
Advertisement

உத்தமபாளையம் : வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில், பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்ரமணியன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். கூட்டுறவு வங்கியில் உள்ள லாக்கருக்கு 'சீல்' வைக்கப்பட்டது.
தேனி மாவட்டம், உத்தமபாளையத்தை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன். இவர் திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் பேரூராட்சி செயல் அலுவலராக உள்ளார். கடந்த மாதம் வரை ஆண்டிபட்டி செயல் அலுவலராக இருந்தார். இவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரில் நேற்று காலை 6:00 மணியளவில் தேனி லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் கீதா தலைமையிலான நான்கு பேர் கொண்ட குழு பி.டி.ஆர்., வீதியில் உள்ள பாலசுப்ரமணியத்தின் வீட்டில் நுழைந்தனர். தாயார், மனைவி, தங்கை இருந்தனர்.பீரோ, லாக்கர்களில் சோதனை நடத்தினர்.
மாலை 4 மணியளவில் மதுரை மாவட்ட கூட்டுறவு வங்கி கிளையில் பாலசுப்ரமணியன் லாக்கரில் சோதனை மேற்கொண்டு 'சீல்' வைத்தனர். இச்சோதனையில் பத்திரங்கள், முக்கிய ஆவணங்கள் சிக்கின. அவற்றை சரிபார்க்கும் பணி நடைபெற்றது. குடும்பத்தினர் பெயரில் உள்ள வங்கி கணக்குகள் பற்றி தீவிரமாக விசாரித்தனர்.
லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறுகையில், 'வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் வீடு, லாக்கரில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளது. விசாரணை நடைபெற்று வருகிறது'என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X