பொது செய்தி

தமிழ்நாடு

மூச்சுப்பயிற்சி... உயிர்காக்கும் உன்னத பயிற்சி

Added : செப் 17, 2020
Share
Advertisement
 மூச்சுப்பயிற்சி, உன்னதபயிற்சி

இப்போது உலகமே முகமூடி அணிந்து கொண்டிருக்கிறது. நடந்து செல்லும்போது நம்மைக் கடந்து செல்வது யாரென்று கூட அறியமுடியவில்லை.

கொரோனா தொற்று பரவத் துவங்கியதிலிருந்து, கடந்த ஏழு மாதங்களில் ஒவ்வொருவரும் ஓராயிரம் முறையாவது ஒரு வார்த்தையைக் கேட்டிருப்போம்...முகக்கவசம் அணியுங்கள்!ஏன் இத்தனை பிரசாரம்...ஏன் இவ்வளவு எச்சரிக்கை...?

ஒரே காரணம் தான்...வாழ்விற்கும், சாவிற்கும் இப்போது மூச்சுக்காற்றே ஒரு காரணமாகிவிட்டதுதான். மூச்சுக் காற்றிலே பரவும் கொரோனா தொற்றுதான், சுவாச மண்டலத்தைத் தாக்கி ரத்தத்தின் ஆக்சிஜன் அளவை குறைத்து உடலில் உள்ள உறுப்புகளை ஒன்றன் பின் ஒன்றாக செயல் இழக்கச் செய்து மரணத்தை உண்டாக்குகிறது.ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறையும்போது ரத்த உறை தன்மை பண்புகளில் வேறுபாடுகள் ஏற்படுகின்றன. மரணம் அதிகரிக்கக் காரணம் இதுதான்.

இதற்கும் யோகா மற்றும் இயற்கை மருத்துவம் தீர்வு ஏற்படுகிறது.'பிராணாயாமா' சுவாச மண்டலத்தில், நைட்ரிக் ஆக்ஸைடை அதிகப்படுத்தி ரத்தத்தில் அளவை குறையாமல் பாதுகாக்கிறது. சுவாசப் பயிற்சியின் போது வெளியிடப்படும் மூச்சுக்காற்றின் அளவு (கார்பன்டை ஆக்ஸைடு) அதிகமாக இருப்பதால், ரத்தத்தின் அல்கலைன் பி.எச்., தேவையற்ற ரத்த உறைதலை தடுக்கிறது. இதனால், உயிரிழப்பு தவிர்க்கப்படுகிறது. கொரோனா மையங்களில் பிராணாயாமா பயிற்சி அளிக்கப்படுவதால் நோயாளிகள் குணப்படும் விகிதம் அதிகரிக்கிறது.

அனைவருக்கும் அவசியம் முகக்கவசம்... ஆனாலும், உயிர் மூச்சு உங்கள் வசம்!


பிராணாயாமா...இயற்கையின் வரம்!

'உயிர் கொல்லும் கொரோனா நோய்க்கிருமியால், உலகம் முழுவதும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு, பல லட்சம் பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்த தொற்றிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள நம்மிடம் அற்புத சக்தி இருக்கிறது. அதுதான் ஆரோக்கியமான உணவு முறையும், யோகா பயிற்சியும். நோய் தொற்று வீரியத்தில் இருந்து நம்மை பாதுகாப்பதற்கு பிராணாயாமா பயிற்சி இயற்கை அளித்த வரம்.-திவான் மைதீன்,
உதவி மருத்துவ அலுவலர்,
யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிறப்பு சிகிச்சை பிரிவு,
அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை,
திருப்பூர்.
தொடர்பு எண்: 94872 53421,
இ.மெயில் : drdivan786@gmail.com


நறுமண எண்ணெய் நன்மை!

ஜலதோஷம் கொரோனா தொற்றுக்கு முக்கியக் காரணியாகிறது. எனவே, சளியை அண்டவிடாமல் இருப்பது அவசியம்.துளசி எண்ணெய், யூகலிப்டஸ் எண்ணெய், கற்பூர எண்ணெய், மிளகுக்கீரை எண்ணெய் மற்றும் எலுமிச்சை புல் எண்ணெய் போன்ற நறுமண எண்ணெய்கள் சளி அகற்ற உதவுகின்றன. ஆவி பிடித்தலை, 5--8 நிமிடங்கள், தினமும் மூன்று முறை வரை செய்யலாம்.அரை தேக்கரண்டி மஞ்சள் துாள் சேர்த்து 150 மில்லிலிட்டர் சூடான பாலை நாளுக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை குடிக்கலாம். நெஞ்சில் உள்ள சளி கழிவாக வெளியேறிவிடும்.நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் அல்லது நெய்யை மூக்கின் இரு நாசிகளிலும் காலை மற்றும் மாலை வேளைகளில் தடவ வேண்டும். ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் எடுத்து 2 அல்லது 3 நிமிடங்கள் வாய் கொப்பளிக்க வேண்டும். பிறகு சூடான நீரை வைத்து வாயை சுத்தம் செய்து கொள்ளலாம். இது ஒரு நாளுக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை செய்யலாம்.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X