மன்மோகன், சிதம்பரம் உள்ளிட்ட 14 எம்பி.,க்களுக்கு மழைக்கால கூட்டத்தொடரில் விடுப்பு

Updated : செப் 17, 2020 | Added : செப் 17, 2020 | கருத்துகள் (31)
Share
Advertisement
ManmohanSingh, Chidambaram, RajyaSabha, Parliament, Leave, HealthIssue, Request, மன்மோகன், சிதம்பரம், மழைக்கால, கூட்டத்தொடர், விடுப்பு

புதுடில்லி: பார்லிமென்டில், மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், மன்மோகன் சிங், ப.சிதம்பரம் உள்ளிட்ட ராஜ்யசபா எம்.பி.,க்கள், 14 பேர், உடல்நலத்தை சுட்டிக்காட்டி, விடுப்பு கோரினர்.

'கொரோனா' வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில், பார்லிமென்டில், கடந்த, 14ம் தேதி முதல், மழைக்காலக் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதற்கிடையே, எம்.பி.,க்கள் பலரும், வைரசால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதனால், இதர எம்.பி.,க் களும், பார்லிமென்ட் ஊழியர்களும் பீதியடைந்து உள்ளனர். இந்நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் உள்ளிட்டோர், உடல்நலத்தை சுட்டிக்காட்டி, விடுப்பு கடிதம் அனுப்பி வைத்தனர். அதில், இவர்கள் இருவரும், நடப்பு கூட்டத்தொடர் முழுதும் பங்கேற்க இயலாது என, குறிப்பிட்டு உள்ளனர்.


latest tamil newsஇவர்களைத் தவிர, பா.ம.க.,வின் அன்புமணி ராமதாஸ், காங்., தலைவர் ஆஸ்கர் பெர்னாண்டஸ், அ.தி.மு.க.,வின் நவநீதகிருஷ்ணன், ஒய்.எஸ்.ஆர்., - காங்., கட்சியின் பரிமல் நாத்வானி, நியமிக்கப்பட்ட உறுப்பினர் நரேந்திர ஜாதவ், சிக்கிம் ஜனநாயக முன்னணியின் ஹிஷே லாச்சங்பா, ஆம் ஆத்மியின் சுஷில் குமார் குப்தா, திரிணமுல் காங்., கட்சியின் மனஸ் ரஞ்சன் பூனியா, ஐக்கிய ஜனதா தளத்தின் மஹேந்திர பிரசாத். நாகா மக்கள் முன்னணியின் கேன்யே, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதியின் லக்ஷ்மிகாந்த ராவ் மற்றும் பந்த பிரகாஷ், உள்ளிட்டோரும் விடுப்பு கோரினர். இதை, ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு நேற்று தெரிவித்தார்.

அப்போது அவர் கூறுகையில், “14 எம்.பி.,க்கள், விடுப்பு கோரியுள்ளனர். இதில், நரேந்திர யாதவ், பந்த பிரகாஷ் மற்றும் நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட மூன்று பேரை தவிர, மீதமுள்ள, 11 பேரும், இந்த ஒட்டுமொத்த கூட்டத்தொடரிலும் பங்கேற்க இயலாது என, விடுப்பு கோரியுள்ளனர்,” என்றார். இந்த, 14 எம்.பி.,க்களின் விடுப்புகளும், ராஜ்யசபா செயலகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

Advertisement
வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
spr - chennai,இந்தியா
18-செப்-202002:31:53 IST Report Abuse
spr பொதுவாக கைது நடவடிக்கை எடுத்தால்தான் இப்படி உடல் நலம் காட்டி தப்பிப்பது அரசியல்வியாதிகளின் இயல்பு இப்பொழுது அவரவர் பணிக்கு வருவதற்கு கூட இப்படியொரு வழியா கூட்டத்தொடர் முடியும் வரை இவர்களை கொரோனா தொற்று பரவாமல் தனித்து வீட்டில் அடைக்கலாமே. தேர்தலில் நின்று மக்களை நேருக்கு நேர் சந்திக்க அஞ்சும் திரு சிங்கும் பாராளுமன்றத்தையும் சந்திக்க அஞ்சுகிறாரோ
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
17-செப்-202018:06:33 IST Report Abuse
Endrum Indian இது என்னவோ சஸ்பென்ஸன் ஆர்டர் மாதிரி இருக்கின்றது. இதை இடப்படியும் செய்யலாமே???
Rate this:
Cancel
spr - chennai,இந்தியா
17-செப்-202017:57:05 IST Report Abuse
spr இவர்களுக்கு விடுப்பு அளிப்பதில் தவறில்லை இருந்தும் உருப்படியாக எதுவும் செய்யப்போவதில்லை ஆனால் இவர்கள் கூட்டத் தொடர் முடியும்வரை வெளியில் சபையின் நடவடிக்கை குறித்து எதுவும் பேசக்கூடாது எனஉறுதி மொழி தர வேண்டும். இதர உறுப்பினர்கள் சபைக்கு வரும் பொழுது இவர்களுக்கு மட்டும் என்ன சலுகை. உயிருக்குப் பயந்து தங்கள் பணியைச் செய்ய விரும்பாத இவர்களை காக்க ஒரு தேவை ஏற்பட்டால், மருத்துவர் எவரும் முன்வரக்கூடாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X