3 விவசாய மசோதாக்களால் உற்பத்தி அதிகரிக்கும்: பா.ஜ., தலைவர் நட்டா

Added : செப் 17, 2020
Share
Advertisement
B.J.P,BJP,Bharatiya Janata Party,பா.ஜ,ஜே.பி.நட்டா


புதுடில்லி : “பார்லிமென்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள, விவசாயம் தொடர்பான மூன்று மசோதாக்களால், விவசாய உற்பத்தி அதிகரிக்கும்,” என, பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உறுதியளித்தார்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில், பார்லிமென்டில், மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. கூட்டத்தொடரின் முதலாம் நாளான, 14ம் தேதி, விவசாயிகள் உற்பத்தி வர்த்தகத்தை ஊக்குவிக்கும் மசோதா, விலை நிர்ணயம் மற்றும் விவசாய சேவைகளுக்கான விவசாயிகள் ஒப்பந்த மசோதா மற்றும், அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா என, மூன்று மசோதாக்கள், தாக்கல் செய்யப்பட்டன.
இதில், அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா, லோக்சபாவில், நேற்று முன்தினம், குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேறியது. இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கூட்டணி கட்சியான அகாலி தளம் ஓட்டளித்தது.இதற்கிடையே, மத்திய அரசின் இந்த மூன்று விவசாய மசோதாக்களுக்கு, விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களில், விவசாய சங்கங்கள் போராட்டத்தில் குதித்துள்ளன.
இந்நிலையில், இந்த விவசாய சட்டங்கள் குறித்து, பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேற்று கூறியதாவது:
பார்லிமென்டில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள, விவசாயம் தொடர்பான மூன்று மசோதாக்களும், விவசாய உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும். தங்கள் உற்பத்திக்கு ஏற்ற சரியான விலையை பெற, விவசாயிகளுக்கு உதவும். அனைத்து நடைமுறைகளும் வெளிப்படைத்தன்மையுடன் இருக்கும். குறைந்தபட்ச ஆதரவு விலை முறை, தொடர்ந்து இருக்கும்.இந்த மசோதாக்களுக்கு, எதிர்க்கட்சிகள், அரசியல் நோக்கங்களுக்காகவே எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். எதிர்க்கட்சிகளின் தேர்தல் வாக்குறுதியையும் சேர்த்து, பா.ஜ., நிறைவேற்றி வருகிறது. அகாலி தளம் கட்சியின் தலைவர்களிடம், மசோதாக்கள் குறித்து விளக்கினேன்.
இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X