பொது செய்தி

இந்தியா

கொரோனாவை வென்ற 100 வயது மூதாட்டி

Updated : செப் 17, 2020 | Added : செப் 17, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
100YearOld, Assam, Woman, Beats, Covid-19, 100வயது, மூதாட்டி, கொரோனா, பாதிப்பு, குணம், அசாம்

கவுகாத்தி: அசாமைச் சேர்ந்த 100 வயது மூதாட்டி ஒருவர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு, வயதான முதியவர்கள், வேறு நோய்களால் பாதிக்கப்பட்டோர் மற்றும் நோயெதிர்ப்பு குறைபாடுள்ளவர்கள் அதிகளவில் இலக்காகின்றனர். இருப்பினும் பல இடங்களில் 100 வயதை கடந்தவர்கள் கூட கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அந்தவகையில் அசாமை சேர்ந்த 100 வயது மூதாட்டி ஒருவர் கொரோனா பாதிப்பிலிருந்து நலம் பெற்றுள்ளார். அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள மகேந்திர மோகன் சவுத்ரி மருத்துவமனையில், முதியோர் இல்லத்தில் வசித்து வரும் மாயி ஹாண்டிக்யூ என்ற 100 வயது மூதாட்டி, 10 நாட்களுக்கு முன்பு கொரோனா உறுதி செய்யப்பட்டு, அனுமதிக்கப்பட்டார்.


latest tamil news



தொடர் சிகிச்சையில் இருந்த அவர் தற்போது பூரண நலம் பெற்று வீடு திரும்பியுள்ளார். அவரை முதியோர் இல்லத்திற்கு அனுப்புவதற்கு முன்பாக, மருத்துவமனையிலேயே, டாக்டர்களும், நர்ஸ்களும் இணைந்து கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர். கொரோனாவிலிருந்து மீண்ட மாயி கூறுகையில், ‛மருத்துவமனையில் இருந்த போது அவர் தனக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை மற்றும் உணவு சிறப்பாக இருந்தது. டாக்டர்களும், நர்ஸ்களும் தன்னை மிகவும் கனிவுடன் கவனித்துக் கொண்டனர்.


latest tamil news


அசைவ உணவுகளை விரும்பி உண்ணும் எனக்கு, பெரும்பாலான நேரம் அசைவ உணவுகளையே வழங்கினார்கள். அவை எனக்கு மிகவும் பிடித்தமானதாக இருந்தது. மாநில சுகாதாரத் துறை அமைச்சருக்கும் எனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்,' எனக் கூறினார்.
அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் கூறுகையில், மருத்துவமனைக்கு வந்த போது, அவரது வயதுதான் எங்களுக்கு கவலையளித்தது. ஆனால் அவர் எப்போதும் மகிழ்ச்சியாகவும் உற்சாகத்துடன் நேர்மறை ஆற்றலை வெளிப்படுத்திக் கொண்டே இருந்ததே, விரைவில் அவர் குணமடைய வாய்ப்பாக இருந்தது,' என்றனர்.
மாயியுடன் முதியோர் இல்லத்தில் இருந்த 12 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதில், இதுவரை 5 பேர் இல்லத்துக்கு திரும்பிவிட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
17-செப்-202015:05:10 IST Report Abuse
Thiagarajan Kodandaraman நூறாண்டுகாலம் வாழ்க என்ற சொல்லுக்கு பொருத்தமான அம்மணி ...மிக்க மகிழ்ச்சி ..இன்னும் பல்லாண்டு வாழ்க
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
17-செப்-202013:16:11 IST Report Abuse
Ramesh Sargam வாழ்த்துக்கள் பாட்டி. நீடூழி வாழ்க. அந்த காலத்து மக்களை கொரோனாவால் ஒன்றும் செய்ய முடியாது. ஏனென்றால் அவர்கள் பழக்க வழக்கம், உணவுமுறை எல்லாம் மிகுந்த சிறப்பானது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X