இந்தியாவிலேயே கொரோனா தடுப்பூசிகளை தயாரிக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ஐதராபாத்தை தலைமை யிடமாகக் கொண்டு இயங்குகிறது அரவிந்தோ பார்மா என்ற மருந்து நிறுவனம். இது தன் அமெரிக்க பிரிவான' 'ஆரோ வாக்சின்' மையத்தில் செய்து வரும் ஆராய்ச்சிகளின் பலனாக கிடைக்கவிருக்கும் கொரோனா தடுப்பூசியை, இந்தியாவில் தயாரித்து விற்பனை செய்யவிருக்கிறது.
கொரோனா தடுப்பு மருந்து ஆராய்ச்சி விரைவாகவும், திட்டமிட்டபடியும் முன்னேறி வருவதால், இந்தியாவில் அதை தயாரிக்க, உலகத் தரம்வாய்ந்த தடுப்பு மருந்து ஆலையை விரைவில் கட்டவிருப்பதாக, அரவிந்தோ பார்மாவின் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.மத்திய உயிரித்தொழில்நுட்பத் துறை, கோவிட்-19 தடுப்பு மருந்துக்கென உருவாக்கியுள்ள உயிரிதொழில்நுட்பத் தொழில்முறை ஆராய்ச்சி உதவி கவுன்சிலின் (BIRAC)கூட்டுறவுடன், இந்த ஆலையை அரவிந்தோ பார்மா துவங்கும்.
இந்தியாவில், கொரோனா வைரசுக்கான தடுப்பூசிகளை தயாரிப்பதில், பாரத் பயோடெக், சீரம் இன்ஸ்டிடியூட், ஜைடஸ் காடிலா, பனேசியா பயோடெக், இன்டியன் இம்யூனாலஜிகல்ஸ், மின்வேக்ஸ் மற்றும் பயாலஜிகல் இ ஆகிய மருந்து ஆராய்ச்சி மற்றும் தயாரிப்பு நிறுவனங்கள் தற்போது மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE