சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

எப்போது நமக்கு தடுப்பூசி கிடைக்கும்?

Added : செப் 17, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
 எப்போது நமக்கு தடுப்பூசி கிடைக்கும்?

இந்த ஆண்டு கடைசிக்குள் தடுப்பூசி கிடைத்துவிட வேண்டும் என்பதுதான் பெரும் பாலானோரின் எதிர்பார்ப்பு. ஆனால், வல்லுனர்களின் கருத்துப்படி, இந்தியாவில், 130 கோடி மக்களில் முக்கால்வாசிப் பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் கிடைக்க, 2021 இறுதி வரை கூட ஆகலாம்.
இந்தியா, போலியோ, அம்மை போன்ற சவாலான நோய்களை ஒழிக்க, உலகமே வியக் கும் வகையில் தடுப்பு மருந்து மற்றும் ஊசிகளை, அதுவும் குழந்தைகளுக்கு போட்டு சாதித்த நாடுதான். ஆனால், இந்த சாதனை, படிப்படியாக நடத்தப்பட்டது.கொரோனாவுக்கு தடுப்பூசி போடுவது அதைவிட பல மடங்கு சவாலானது என மருத்துவத்துறை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், தடுப்பூசி வந்தவுடனே, முதல் கட்டமாக, மருத்துவ பணியாளர்கள், காவல் துறை மற்றும் ராணுவம், போக்குவரத்துப் பணியாளர்கள், தொற்றுக்கு எளிதில் ஆளாக வாய்ப்புள்ள 65 வயதுக்கு மேற்பட்டோர் என்று போட்டுவிட்டுத்தான், மற்றவர்களுக்கு போடுவர்.எனவே தான், பெருவாரியான மக்களுக்கு கோவிட்-19 தடுப்பூசிகள் போடுவதற்கு, 2021ஆம் ஆண்டு இறுதிவரை பிடிக்கும் என மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்து உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
18-செப்-202018:11:25 IST Report Abuse
S. Narayanan எப்படியும் விரைந்து செயல் பட்டு எல்லோருக்கும் ஊசி கிடைக்கச்செய்ய வேண்டும்.
Rate this:
Cancel
Murthy - Bangalore,இந்தியா
17-செப்-202020:31:52 IST Report Abuse
Murthy பாதிப்பேருக்கு ஊசிபோட்டுவிட்டால் பாவும் வேகம் குறைந்துவிடும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X