தொடுதிரை, தொழில்நுட்பம் உணவகங்கள், ஏ.டி.எம்.,கள் என்று பல இடங்களில் இன்று இருக்கின்றன. ஆனால், இன்றைய பெருந்தொற்றுக் காலங்களில், பலரும் தொட்ட திரையை தொடுவதற்கு மக்கள் அச்சப்படுவது அதிகரித்து வருகிறது.
எனவே தான், இந்த இடங்களில் குரல் மூலம் இயக்கும் திரை தொழில்நுட்பத்தை, அமெரிக்காவின், சிலிக்கன் பள்ளத்தாக்கிலுள்ள 'சென்சாரி இன்க்' என்ற நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.குறிப்பாக துரித உணவகங்களில், பார்சல் ஆர்டர் செய்வது, அல்லது, காரில் இருந்தபடியே, துரித உணவுகளை ஆர்டர் செய்து எடுத்துச் செல்வது போன்ற தொழில்களுக்கு இத்தகைய குரல் ஆணை தொழில்நுட்பம் உதவிகரமாக இருக்கும் என சென்சாரி இன்கின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தொழில்நுட்பத்திற்குப் பின்னால் செயற்கை நுண்ணறிவு மென்பொருள் உள்ளது. இது மனிதக் குரலையும் உச்சரிப்பையும் புரிந்துகொண்டு, திரையில் அவர்கள் சொன்னதை எழுத்து அல்லது புகைப்படமாக காட்டும், அதை உறுதி செய்து இறுதியாக ஆர்டரை உறுதி செய்தால், பிழைகளை தவிர்க்கலாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE