பொது செய்தி

இந்தியா

பிரதமர் மோடி பிறந்த நாள்: டுவிட்டரில் ட்ரெண்டிங்

Updated : செப் 17, 2020 | Added : செப் 17, 2020 | கருத்துகள் (18)
Share
Advertisement
புதுடில்லி : பாரத பிரதமர் மோடி தனது 70வது பிறந்தநாளை இன்று(செப்., 17) கொண்டாடுகிறார். இதையொட்டி சமூகவலைதளங்களில் #HappyBirthdayPMModi, #Modiji, #NarendraModiBirthday, #PMofIndia உள்ளிட்ட ஹேஷ்டாக்குகள் டிரெண்ட் ஆகி உள்ளன.சாமானியனும் சரித்திரம் படைக்கலாம் என்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்க்கையே உதாரணம். ஏழைத்தாயின் மகனாக, டீ விற்றவராக, சிறந்த நிர்வாகியாக, தேசத்தை பாதுகாக்கும் காவலனாக உச்சம் தொட்டுள்ளார்.
HappyBirthdayPMModi, NarendraModiBirthday, நரேந்திரமோடி, மோடி,

புதுடில்லி : பாரத பிரதமர் மோடி தனது 70வது பிறந்தநாளை இன்று(செப்., 17) கொண்டாடுகிறார். இதையொட்டி சமூகவலைதளங்களில் #HappyBirthdayPMModi, #Modiji, #NarendraModiBirthday, #PMofIndia உள்ளிட்ட ஹேஷ்டாக்குகள் டிரெண்ட் ஆகி உள்ளன.

சாமானியனும் சரித்திரம் படைக்கலாம் என்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்க்கையே உதாரணம். ஏழைத்தாயின் மகனாக, டீ விற்றவராக, சிறந்த நிர்வாகியாக, தேசத்தை பாதுகாக்கும் காவலனாக உச்சம் தொட்டுள்ளார். சுதந்திர இந்தியாவில் அதிகம் விமர்சிக்கப்பட்ட தலைவரும் இவரே. இதை கண்டுகொள்ளாமல், நாட்டின் வளர்ச்சியில் மட்டும் கண்ணும் கருத்துமாக உள்ளார். தன்னிகரில்லா தேசப்பற்றால், மக்களின் இதயங்களை கவர்ந்துள்ளார். இவரது நல்ல எண்ணமும், துணிச்சலான செயலும் வல்லரசு நாடாக இந்தியாவை உயர்த்தும். இவரின் 70வது பிறந்த நாள் இன்று. இதை நாடு முழுக்க பலர் கொண்டாடி வருகின்றனர். அதனாலேயே டுவிட்டரில் மோடி சத்தம் அதிகம் கேட்கிறது.

அவரது பிறந்தநாளுக்கு #HappyBirthdayPMModi, #Modiji, #NarendraModiBirthday, #PMofIndia உள்ளிட்ட ஹேஷ்டாக்குகள் டிரெண்ட் ஆகி உள்ளன. இத்தனை ஹேஷ்டாக்குகளில் சுமார் 5.75 லட்சம் பேர் ரீ-டுவீட் செய்துள்ளனர்.


latest tamil news
டுவிட்டரில் ஒருவரை பற்றிய புகழ்ச்சி உண்டு என்றால் இகழ்ச்சி இல்லாமலா இருக்கும். வழக்கம்போல் மோடியை அவதூறு செய்பவர்களும் தங்களது பணியை செவ்வனே செய்து வருகின்றனர். அதிலும் ஒரு நாட்டின் பிரதமர் என்று கூட பாராமல் மிகவும் அநாகரீகமான வார்த்தையை வைத்து, தமிழகத்தில் இருப்பவர்கள் டிரண்ட் செய்கின்றனர். பதிலுக்கு ஈ.வே.ரா ராமசாமியை விமர்சித்து ஒரு அநாகரீக டுவீட்டை டிரண்ட் செய்கின்றனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறும்போது, "சமூகவலைதளங்களில் எவ்வளவோ நல்ல விஷயங்கள் நடக்கின்றன. ஆனால் சிலரோ இதுபோன்று அநாகரீக டுவீட்டுகளை போட்டு நல்லதொரு சமூகவலைதளங்களை அரசியல் சாக்கடையாகவும் மாற்றுகின்றனர்" என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
19-செப்-202011:52:28 IST Report Abuse
Malick Raja ஆ .. போடு .. ஓ போடு .. ..
Rate this:
Cancel
17-செப்-202017:12:03 IST Report Abuse
IndiaTamilan Kumar (Tamilagathil  Nallavarkal  Aatchikku VARAVENDUM ) நாட்டுக்காக படைக்கப்பட்ட அட்புத மனிதர் மோடிஜி வாழ்க பல்லாண்டு
Rate this:
Cancel
17-செப்-202017:10:46 IST Report Abuse
IndiaTamilan Kumar (Tamilagathil  Nallavarkal  Aatchikku VARAVENDUM ) இறைவன் ஆசி பெற்ற மோடிஜி நீண்ட நாள் நல்ல உடல் ஆரோக்கியத்தோடு பிரதமராக இந்த நாட்டை வல்லரசு ஆக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X