ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடை: அமெரிக்கா உறுதி

Updated : செப் 17, 2020 | Added : செப் 17, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
வாஷிங்டன்: 'ஈரான் மீது மீண்டும் புதிய பொருளாதாரத் தடை விதிக்கப்படும்' என, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே 2018ல் போர்ச் சூழல் மூண்டது. கடந்த ஜனவரி மாதத்தில் ஈரானின் முக்கியப் போர் தளபதி காசிம் சுலைமானியை அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்திக் கொன்றது. அதைத் தொடர்ந்து ஈரான் ராணுவம்,

வாஷிங்டன்: 'ஈரான் மீது மீண்டும் புதிய பொருளாதாரத் தடை விதிக்கப்படும்' என, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.latest tamil newsஅமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே 2018ல் போர்ச் சூழல் மூண்டது. கடந்த ஜனவரி மாதத்தில் ஈரானின் முக்கியப் போர் தளபதி காசிம் சுலைமானியை அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்திக் கொன்றது. அதைத் தொடர்ந்து ஈரான் ராணுவம், ஈராக்கில் இயங்கிவரும் அமெரிக்க ராணுவத் தளத்தில் தாக்குதல் நடத்தியது. அந்தத் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் பலத்த காயம் அடைந்தனர்.


latest tamil newsஅமெரிக்காவில் நவ., மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலுக்கு முன், தென் ஆப்பிரிக்காவுக்கான அமெரிக்கத் தூதரைக் கொலை செய்ய ஈரான் திட்டமிட்டிருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இதையடுத்து, 'அமெரிக்காவுக்கு எதிராக ஈரான் தொடுக்கும் ஒவ்வொரு தாக்குதலுக்கும் ஆயிரம் மடங்கு பதில் தாக்குதல் அளிக்கப்படும்' என, அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.latest tamil news
இந்த நிலையில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ, ''ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை அடுத்த வாரம் ஐக்கிய நாடுகள் சபையில் அமல்படுத்தும். ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கு அமெரிக்கா தொடர்ந்து முயலும். மத்திய கிழக்குப் பகுதிகளில் அமைதியை ஏற்படுத்த அனைத்து முயற்சிகளையும் அமெரிக்கா செய்யும்,'' எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ram -  ( Posted via: Dinamalar Android App )
17-செப்-202021:29:46 IST Report Abuse
Ram why not sanction Chinaa. The world will also come forward. you could make funny out of third or developing nations, not with your counterparts.
Rate this:
Cancel
mathimandhiri - chennai,இந்தியா
17-செப்-202015:49:18 IST Report Abuse
mathimandhiri ஒரு காலத்தில் ஈரானின் ஷா ஆட்சி காலத்தில் ஈரான் அமேரிக்கா பெரிய நட்பு நாடுகள். வளைகுடா யுத்தத்தில் ஈரானுக்கு பக்க பலமாக நின்றது. அதன் பின் அயோடோல்லாக்கள் வந்து மத வெறி ஆட்சி ஏற்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்க நல்லுறவு சரிந்தது. இன்று கச்சா எண்ணெயில் கிடைத்த அபரிமிதமான பணத்தின் திமிரால் ஈரானின் ரவுடித் தனம் தாங்க முடிய வில்லை. எண்ணெய்த் திமிர் போட்டுத் தள்ளினால் தான் அடங்கும்.
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
17-செப்-202015:08:14 IST Report Abuse
Anand துருக்கி, ஈரான், பாகிஸ்தான், சீனா, வடகொரியா இவைகளை போட்டு தாக்கி அழித்தால் உலகம் அமைதியடையும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X