பொது செய்தி

தமிழ்நாடு

ரசிகருக்காக ரஜினி பிரார்த்தனை: வைரலானது 'ஆடியோ'

Updated : செப் 17, 2020 | Added : செப் 17, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement

சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்ட ரசிகர், விரைவில் குணமடைய வாழ்த்துவதாக ரஜினி வெளியிட்ட, 'ஆடியோ' சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.latest tamil newsதர்ஷன் என்ற பெயரில் டுவிட்டரில் இயங்கும் முரளி என்பவர் நடிகர் ரஜினியின் தீவிர ரசிகர் மற்றும் மக்கள் மன்ற உறுப்பினர். தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ளார். அவரது சிறுநீரகமும் பாதிக்கப்பட்டுள்ளது. ஐ.சி.யூ.,வில் சிகிச்சையில் இருக்கும் படத்தை டுவிட்டரில் பகிர்ந்து, 'உன்னை (ரஜினியை) அரியணையில் ஏற்ற பாடுபடாமல் போகிறேனே என்ற ஒரே வருத்தம் உள்ளது. என் இறுதி ஆசை, 2021 தேர்தலில் வெற்றி பெற்று தமிழக மக்களுக்கு மிகச்சிறந்த தலைவனாகவும் தந்தை மற்றும் ஆன்மீக குருவாகவும் வீரநடைபோட்டு அடித்தட்டு கிராம மக்களின் தனிநபர் வருமானம் 25 ஆயிரம் என்ற நிலையை உருவாக்கிக் கொடு' என, உருக்கமாகப் பதிவிட்டிருந்தார்.

இதையறிந்த ரஜினி, அவருக்காக தற்போது ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'முரளி நான் ரஜினிகாந்த் பேசுறேன். உனக்கு ஒன்னும் ஆகாது கண்ணா. தைரியமா இருங்க. நான் இறைவனை பிரார்த்திக்கிறேன். சீக்கிரம் குணமடைந்து நீங்க வீட்டுக்கு வந்துடுவீங்க. குணமடைந்து வந்த பிறகு ப்ளீஸ் எங்க வீட்டுக்கு குடும்பத்தோட வாங்க. நான் உங்கள பார்க்கறேன். தைரியமாக இருங்க. நான் ஆண்டவனை வேண்டிக்கிறேன். வாழ்க' எனப் பேசியுள்ளார்.

இந்த ஆடியோவை கேட்டு சிகிச்சையில் உள்ள முரளி, 'ஆசிர்வாதம் கிடைத்தது, அதிசயம் நடந்தது அற்புதம் நிகழ்ந்தது' என, உற்சாகத்துடன் குறிப்பிட்டுள்ளார். ரஜினியின் இந்த ஆடியோவை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

latest tamil news


Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PR Makudeswaran - Madras,இந்தியா
17-செப்-202020:03:30 IST Report Abuse
PR Makudeswaran இன்னும் மக்கள் ஒரே எண்ணத்தில் சினிமாக்காரனை நம்பிக்கொண்டு இருக்கிறார்கள். என்று தீரும் இந்த mokam தனி நபர் வருமானம் யாரால் உயரும் என்று தெரியவில்லையே.
Rate this:
RaajaRaja Cholan - Perungudi,சிங்கப்பூர்
18-செப்-202008:16:57 IST Report Abuse
RaajaRaja Cholanஉன்னை போன்ற ஆட்களின் சிந்தனையில் நாடு செல்லாமல் இருக்கும் பொழுது...
Rate this:
Cancel
Palanisamy Sekar - Jurong-West,சிங்கப்பூர்
17-செப்-202016:52:36 IST Report Abuse
Palanisamy Sekar ஆன்மிகம் ரஜினியை இந்த அளவுக்கு உயர்த்தியுள்ளது. அரசியலே வேண்டாம் என்றிருந்தாலும் மக்களின் ஆசை ரஜினி அரசியலுக்கு வரணும் என்று. நேர்மையான மனிதர்..உள்ளத்தில் உள்ளதை தைரியமாக பேசுகின்ற ஆற்றல் உள்ளவர். ஆட்சிக்கு வந்தால் என்றால் நிச்சயம் ஊழல் செய்யவே மாட்டார். அவரிடம் இல்லாத பணமா என்ன? அடிதட்டிலிருந்து வந்தவர்...உழைப்பால் உயர்ந்தவர். சில தவறுகளை திருத்திக்கொண்டு தன்னை உயர்த்திக்கொண்ட நல்ல உள்ளம் கொண்டவர். தனக்காக இறந்துபோவோம் என்கிற நிலையில் அந்த ரசிகரும் தொண்டருமான அவருக்காக மனம் உருகி பிரார்த்திக்கின்றேன் என்று சொன்னாரே அங்கேதான் ரஜினியின் பெருமை உலகறிய செய்கின்றது. எவ்வளவு விமர்சனங்கள் அவர் மீது வைத்தாலும் அவருக்கென்று மக்கள் செல்வாக்கு என்பது நிச்சயம் பிற அரசியல் தலைகளை விட அதிகமாகத்தான் இருக்கிறது. மறுக்க முடியாது. ரஜினியின் அரசியல் பிரவேசம் என்பது திமுகவின் இறுதி நாட்களை எண்ணுவது என்பது நிச்சயம். இலவு காத்த கிளியை போலத்தான் தத்தி யின் பேராசை வெறும் கனவாக போகிறது. ரஜினி அரசியலுக்கு வருவைது என்பது இறைவன் அவருகிட்ட கட்டளை..நல்ல மனிதர் ரஜினி..என்னை எப்போது பார்க்க கூப்பிடுவாரோ? எதிர்பார்க்கின்றேன்..
Rate this:
Cancel
17-செப்-202016:26:01 IST Report Abuse
Janarthanan (குடும்ப ஆட்சிக்கு முடிவுரை எழுத வேண்டும்) இளம் புயல் உதவாத நிதி நடித்த படத்தை எல்லாம் பார்த்து விட்டு டேமேஜ் ஆகமா இருக்கும் அடிமை கூட்டத்திற்கு என்னிக்காவது வாழ்த்து தெரிவித்து இருக்கானா ????
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X