ரசிகருக்காக ரஜினி பிரார்த்தனை: வைரலானது ஆடியோ| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரசிகருக்காக ரஜினி பிரார்த்தனை: வைரலானது 'ஆடியோ'

Updated : செப் 17, 2020 | Added : செப் 17, 2020 | கருத்துகள் (9)
Share

சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்ட ரசிகர், விரைவில் குணமடைய வாழ்த்துவதாக ரஜினி வெளியிட்ட, 'ஆடியோ' சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



latest tamil news



தர்ஷன் என்ற பெயரில் டுவிட்டரில் இயங்கும் முரளி என்பவர் நடிகர் ரஜினியின் தீவிர ரசிகர் மற்றும் மக்கள் மன்ற உறுப்பினர். தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ளார். அவரது சிறுநீரகமும் பாதிக்கப்பட்டுள்ளது. ஐ.சி.யூ.,வில் சிகிச்சையில் இருக்கும் படத்தை டுவிட்டரில் பகிர்ந்து, 'உன்னை (ரஜினியை) அரியணையில் ஏற்ற பாடுபடாமல் போகிறேனே என்ற ஒரே வருத்தம் உள்ளது. என் இறுதி ஆசை, 2021 தேர்தலில் வெற்றி பெற்று தமிழக மக்களுக்கு மிகச்சிறந்த தலைவனாகவும் தந்தை மற்றும் ஆன்மீக குருவாகவும் வீரநடைபோட்டு அடித்தட்டு கிராம மக்களின் தனிநபர் வருமானம் 25 ஆயிரம் என்ற நிலையை உருவாக்கிக் கொடு' என, உருக்கமாகப் பதிவிட்டிருந்தார்.

இதையறிந்த ரஜினி, அவருக்காக தற்போது ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'முரளி நான் ரஜினிகாந்த் பேசுறேன். உனக்கு ஒன்னும் ஆகாது கண்ணா. தைரியமா இருங்க. நான் இறைவனை பிரார்த்திக்கிறேன். சீக்கிரம் குணமடைந்து நீங்க வீட்டுக்கு வந்துடுவீங்க. குணமடைந்து வந்த பிறகு ப்ளீஸ் எங்க வீட்டுக்கு குடும்பத்தோட வாங்க. நான் உங்கள பார்க்கறேன். தைரியமாக இருங்க. நான் ஆண்டவனை வேண்டிக்கிறேன். வாழ்க' எனப் பேசியுள்ளார்.

இந்த ஆடியோவை கேட்டு சிகிச்சையில் உள்ள முரளி, 'ஆசிர்வாதம் கிடைத்தது, அதிசயம் நடந்தது அற்புதம் நிகழ்ந்தது' என, உற்சாகத்துடன் குறிப்பிட்டுள்ளார். ரஜினியின் இந்த ஆடியோவை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.





latest tamil news


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X