வேலைவாய்ப்பை எத்தனை காலம் அரசு மறுக்கும்?: ராகுல் கேள்வி

Updated : செப் 17, 2020 | Added : செப் 17, 2020 | கருத்துகள் (43)
Share
Advertisement
Rahul, UnEmployment, Congress, ராகுல், வேலையின்மை, காங்கிரஸ்

புதுடில்லி: வேலைவாய்ப்பு என்பது மக்களுக்குக் கவுரவம். இன்னும் எத்தனை காலத்துக்கு மக்களுக்கு வழங்காமல் அரசு மறுக்கும் என காங்கிரஸ் எம்.பி., ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொரோனா பரவலால் விதிக்கப்பட்ட நாடு தழுவிய ஊரடங்கால் இந்திய பொருளாதாரம் பாதிக்கப்பட்டதாக காங்., எம்பி., தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தார். மேலும், வேலைவாய்ப்பின்மை, புலம்பெயர்ந்தோர் விவகாரம் உள்ளிட்ட பல பிரச்னைகள் குறித்து மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார். இதற்கிடையே பிரதமர் மோடியின் பிறந்தநாளான இன்று (செப்.,17) காங்., கட்சியினர் தேசிய வேலையின்மை நாளாக பின்பற்றி வருகின்றனர்.


latest tamil news


இந்நிலையில், ஊடகம் ஒன்றின் அறிக்கையில், ‛அரசு வேலைக்காக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடிக்கும் மேல் அதிகரித்துவிட்டது. ஆனால், அரசு வேலைவாய்ப்புத் தளத்தில் 1.77 லட்சம் வேலைவாய்ப்புகள் மட்டுமே இருக்கிறது,' என்ற அறிக்கை வெளியானது. இதனை டுவிட்டரில் பகிர்ந்த ராகுல், ‛மிகப்பெரிய வேலையின்மைச் சூழலால் நமது இளைஞர்கள் இன்றைய தினத்தை தேசிய வேலையின்மை நாளாக அழைக்கிறார்கள். வேலைவாய்ப்பு என்பது கவுரவம். எத்தனை காலத்துக்கு அரசு மக்களுக்கு வழங்காமல் மறுக்கப்போகிறது,' என பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R. Vidya Sagar - Chennai,இந்தியா
17-செப்-202022:53:09 IST Report Abuse
R. Vidya Sagar ஒரு பார்லிமென்ட் உறுப்பினராக இருந்து கொண்டு பார்லிமென்ட் நடக்கும் பொழுது அங்கு போகாமல் வெளிநாட்டில் உட்கர்ந்து கொண்டு ட்வீட் பண்ணுவதுதான் வேலை வாய்ப்பா?
Rate this:
Cancel
17-செப்-202022:27:36 IST Report Abuse
Ganesan Madurai மொதல்ல பார்லிமெண்ட் வந்து பிரதமரை கண்ணோடு கண் பார்க்க துப்புகெட்ட பய நீ.
Rate this:
Cancel
17-செப்-202022:24:47 IST Report Abuse
Ganesan Madurai வேலைவாய்ப்பு கவுரவந்தான் ஆனா உனுக்கு மொதல்ல இருக்கா அந்த கவுரவம்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X