பொது செய்தி

இந்தியா

மருத்துவர்களின் தியாகத்தை மறப்பதா? மருத்துவ சங்கம் கோபம்

Updated : செப் 17, 2020 | Added : செப் 17, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement

புதுடில்லி: 'கொரோனா பணியின் போது, 382 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். மருத்துவர்களின் தியாகத்தை மத்திய அரசு மறந்துவிட்டது' என, இந்திய மருத்துவ சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.latest tamil newsகொரோனா வைரஸ் குறித்து பாராளுமன்றத்தில் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அளித்த அறிக்கையில், பணியின் போது இறந்த மருத்துவர்கள் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. மேலும், 'சுகாதாரம் மாநில பட்டியலில் இருப்பதால் தங்களிடம் தரவுகள் இல்லை' என, சுகாதார இணை அமைச்சர் அறிக்கையும் தந்துள்ளார். இதனால் இந்திய மருத்துவ சங்கம் (ஐ.எம்.ஏ.,) கோபமடைந்துள்ளது.


latest tamil newsஇது குறித்து ஐ.எம்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கை:

இதுவரை, 382 மருத்துவர்கள் கொரோனா வைரசால் இறந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 27 வயது முதல் 85 வயது வரையிலான மருத்துவர்கள் அடக்கம். தொற்று நோய்களின் போது சுகாதாரப் பணியாளர்களின் பங்களிப்பை குறிப்பிட்டிருந்தாலும், நோயால் இறந்த மருத்துவர்கள் பற்றி சுகாதார அமைச்சர் எதுவும் குறிப்பிடவில்லை. அந்த தகவல் அவசியமில்லாதவை என நினைத்துள்ளனர். அது தேசத்தின் கவனத்தை ஈர்க்காது என நினைப்பது மோசமான ஒன்று.


latest tamil newsஇந்தியா இழந்த அளவு மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களை வேறு எந்த நாடும் இழக்கவில்லை. மக்களுக்காக நின்ற தேசிய ஹீரோக்களை அரசு கைவிட்டுவிட்டது. ஒருபுறம் கொரோனா போர் வீரர்கள் என்று அழைப்பதும், மறுபுறம் அவர்களது தியாகத்தை மறுப்பதும் பாசாங்குதனம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jayvee - chennai,இந்தியா
18-செப்-202011:16:00 IST Report Abuse
Jayvee பிரதமர் மோடி பலமுறை சுகாதாரத்துறை ஊழியர்களின் அர்ப்பணிப்பை பாராட்டியுள்ளார். இதற்காக கரவொலி தினமும் ஏற்பாடு செய்தார்.. டர் ரவீந்திரனத்தை போல சில கம்யூனிச ஊழல் டாக்டர்கள் செய்யும் ட்ராமா இது
Rate this:
Cancel
Sivak - Chennai,இந்தியா
17-செப்-202021:39:47 IST Report Abuse
Sivak எல்லையில் நமது ராணுவ வீரர்கள் தினமும் உயிர் செய்கிறார்கள் நாட்டுக்காக ... அவர்களை இழிவாக பேசும் மக்களும் இருக்கிறாரகள் ... அதை நினைத்தால் இது ஒன்றும் பெரிதல்ல ...
Rate this:
Cancel
IRSHAD - Singapore,சிங்கப்பூர்
17-செப்-202019:03:31 IST Report Abuse
IRSHAD இந்த நேரத்தில் நான் ஒன்றை பதிவு செய்ய விரும்புகிறேன் அதே போன்று உங்களில் சில மருத்துவர்களின் அலட்சியத்தால் எத்தனை உயிர் அநியாயமாக இந்த உலகை விட்டு பிரிந்து உள்ளது என்பதை எண்ணி பார்க்கவும் ,ஒருவேளை மக்கள் எல்லோரும் கோபம் கொண்டால் அதற்கு உங்களிடம் பதில் உள்ளதா .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X