எனது பெயரை தவறாக பயன்படுத்துகிறார்கள்: நடிகர் அஜித் எச்சரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

எனது பெயரை தவறாக பயன்படுத்துகிறார்கள்: நடிகர் அஜித் எச்சரிக்கை

Updated : செப் 17, 2020 | Added : செப் 17, 2020 | கருத்துகள் (5)
Share
சென்னை : ஒரு சில தனி நபர்கள் தனது பெயரை தவறாக பயன்படுத்துகிறார்கள் அவர்களிடம் கவனமாக இருங்கள் என நடிகர் அஜித் குமார் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார்.தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். தான் உண்டு, தன் வேலை உண்டு என இருப்பவர். சினிமா தவிர்த்து வெளியிடங்களில் அவ்வளவாக தலைகாட்டாதவர். சினிமா நிகழ்வுகளோ, ஏன் தன் பட விழாக்களில் கூட பங்கேற்க மாட்டார்.
Ajithkumar, Ajith, Thala,

சென்னை : ஒரு சில தனி நபர்கள் தனது பெயரை தவறாக பயன்படுத்துகிறார்கள் அவர்களிடம் கவனமாக இருங்கள் என நடிகர் அஜித் குமார் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். தான் உண்டு, தன் வேலை உண்டு என இருப்பவர். சினிமா தவிர்த்து வெளியிடங்களில் அவ்வளவாக தலைகாட்டாதவர். சினிமா நிகழ்வுகளோ, ஏன் தன் பட விழாக்களில் கூட பங்கேற்க மாட்டார். இந்நிலையில் தனது பெயரை சிலர் தவறாக பயன்படுத்துவதாக கூறி அஜித் சார்பில் அவரது வக்கில் பரத் என்பவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதன் விபரம் வருமாறு : நான் அஜித் குமாரின் அதிகாரப்பூர்வ சட்ட ஆலோசகர். அவர் சார்பில் இந்த அறிக்கையை வெளியிடுகிறோம். சமீபகாலமாக ஒரு சில தனி நபர்கள் பொது வெளியில் என் கட்சிக்காரர்(அஜித்) சார்பாகவோ அல்லது அவரது பிரதிநிதி போலவோ அவரின் அனுமதியின்றி தங்களை முன்னிலைப்படுத்தி வருவதாக சில சம்பவங்கள் கவனத்துக்கு வந்துள்ளன. அஜித்தின் மேலாளரான சுரேஷ் சந்திரா மட்டுமே அவரின் சமூக மற்றும் தொழில் ரீதியான நிர்வாகி.


latest tamil news




தன்னுடைய பெயரைப் பயன்படுத்தி எந்த ஒரு தனி நபரோ, நிறுவனமோ யாரையேனும் அணுகினால் அந்தத் தகவலை சுரேஷ் சந்திராவிடம் உடனடியாகத் தெரிவிக்க வேண்டும். இதை மீறி இத்தகைய நபர்களிடம், தன் சம்பந்தமாக யாரும் தொழில் மற்றும் வர்த்தக ரீதியாகத் தொடர்பிலிருந்தால், அதனால் ஏதேனும் பாதகம் ஏற்பட்டால் அதற்கு என் கட்சிக்காரர் எந்த விதத்திலும் பொறுப்பு இல்லை என்று அறிவிப்பதோடு, பொதுமக்களும் இத்தகைய நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக் கொள்கிறார்".

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X