பா.ஜ.,வின் புதிய எம்.பி., கொரோனாவால் உயிரிழப்பு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பா.ஜ.,வின் புதிய எம்.பி., கொரோனாவால் உயிரிழப்பு

Updated : செப் 17, 2020 | Added : செப் 17, 2020 | கருத்துகள் (7)
Share
பெங்களூரு: ராஜ்யசபாவிற்கு புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜ., - எம்.பி., அசோக் கஸ்தி கொரோனா தொற்றால் இன்று உயிரிழந்தார். கொரோனா வைரஸ் தொற்றால் அரசியல் தலைவர்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. கூட்டத் தொடர் ஆரம்பிப்பதற்கு முன் நடத்தப்பட்ட பரிசோதனையில், 20க்கும் மேற்பட்ட எம்.பி.,க்களுக்கு தொற்று

பெங்களூரு: ராஜ்யசபாவிற்கு புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜ., - எம்.பி., அசோக் கஸ்தி கொரோனா தொற்றால் இன்று உயிரிழந்தார்.



latest tamil news



கொரோனா வைரஸ் தொற்றால் அரசியல் தலைவர்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. கூட்டத் தொடர் ஆரம்பிப்பதற்கு முன் நடத்தப்பட்ட பரிசோதனையில், 20க்கும் மேற்பட்ட எம்.பி.,க்களுக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.


latest tamil news



இந்நிலையில் கர்நாடக பா.ஜ., தலைவரும், கடந்த ஜூன் மாதம் ராஜ்யசபாவிற்கு எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டவருமான அசோக் கஸ்திக்கு, 55, கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. சிகிச்சைக்காக கடந்த வாரம் 'மனிபால்' மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கடுமையான சுவாச பிரச்னை ஏற்பட்டு இன்று பிற்பகல் உயிரிழந்தார்.



latest tamil news



கல்லூரி காலத்திலிருந்தே அரசியல் ஈடுபாடு கொண்ட இவர், 1990 முதல் பா.ஜ.,வில் உள்ளார். பெல்லாரி மற்றும் ராய்ச்சூரில் கட்சியை வளர்த்தவர்களில் இவர் முக்கியமானவர். பா.ஜ.,வில் இளைஞரணி, வழக்கறிஞர் அணி, பொதுச் செயலாளர் போன்ற பதவிகளில் இருந்துள்ளார். அவரது திடீர் மறைவு கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X