இந்திய பெருங்கடலில் சீன கப்பலை விரட்டிய இந்திய கடற்படை| Dinamalar

இந்திய பெருங்கடலில் சீன கப்பலை விரட்டிய இந்திய கடற்படை

Updated : செப் 17, 2020 | Added : செப் 17, 2020 | கருத்துகள் (7)
Share
புதுடில்லி: லடாக்கில் ஏற்பட்ட மோதல் காரணமாக, இந்தியா, சீனா எல்லையில் பதற்றம் நிலவும் நிலையில், கடந்த மாதம் இந்திய பெருங்கடலில் நுழைந்த சீன ஆராய்ச்சி கப்பலை இந்திய கடற்படை கண்டறிந்தது. இதனையடுத்து அந்த கப்பல் சீனா திரும்பியது.இது தொடர்பாக பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் கூறுகையில், இந்திய பெருங்கடல் பகுதியில், சீன கப்பல்களின் நடமாட்டத்தை கண்காணிக்க, இந்திய
tensions,  border, IndianNavy, track, Chinese, researchvessel, IndianOcean, இந்தியா, இந்தியகடற்படை, சீனக்கப்பல்,

புதுடில்லி: லடாக்கில் ஏற்பட்ட மோதல் காரணமாக, இந்தியா, சீனா எல்லையில் பதற்றம் நிலவும் நிலையில், கடந்த மாதம் இந்திய பெருங்கடலில் நுழைந்த சீன ஆராய்ச்சி கப்பலை இந்திய கடற்படை கண்டறிந்தது. இதனையடுத்து அந்த கப்பல் சீனா திரும்பியது.

இது தொடர்பாக பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் கூறுகையில், இந்திய பெருங்கடல் பகுதியில், சீன கப்பல்களின் நடமாட்டத்தை கண்காணிக்க, இந்திய கடற்படைக்கு சொந்தமான போர்க் கப்பல்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், கடந்த மாதம், யுவான் வாங் கிளாஸ் என்ற ஆராய்ச்சி கப்பல், மலாக்கா நீரிணை வழியாக, இந்திய பெருங்கடலில் நுழைந்தது. இதனை கண்டறிந்த இந்திய கடற்படை, சீன கப்பலை தொடர்ந்து கண்காணித்து வந்தது. இதனையறிந்த சீன கப்பல், கடந்த சில நாட்களுக்கு முன்னர், சீனா திரும்பியது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


latest tamil news


இது போன்ற ஆராய்ச்சி கப்பல்கள், அடிக்கடி இந்திய பெருங்கடலில் நுழைந்து இந்திய கடற்படையின் பாதுகாப்பு குறித்து ஆராய முற்படுவது வழக்கம். இதனை கண்டறியும் இந்திய கடற்படையினர், சீன கப்பல்களை விரட்டுவது வாடிக்கையாக உள்ளது. கடந்த ஆண்டுடிச., சீனா ஆராய்ச்சி கப்பல் ஷி யான்1, அந்தமான் நிகோபார் தீவுகளின் போர்ட் பிளேர் அருகே வந்தது. இதனை இந்திய கண்காணிப்பு விமானங்கள் கண்டறிந்தன.

இந்திய பெருங்கடல் பகுதி மற்றும் தென் கிழக்கு ஆசியா பகுதிகளில் கடல்பாதுகாப்பு பணிகளில் ஈடுபட அந்தமான் தீவுகள் பகுதி, இந்தியாவுக்கு முக்கியமாக உள்ளது. அதனால், அங்கு இந்தியாவின் நடவடிக்கைகள் குறித்து உளவு பார்க்க, ஆராய்ச்சி கப்பல்களை சீனா பயன்படுத்துவது வழக்கம். ஆனால், இந்தியன் எக்ஸ்குளூசிவ் பொருளாதார மண்டலத்தில், ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட வெளிநாடுகளுக்கு அனுமதி வழங்க இந்திய சட்டத்தில் இடமில்லாததால், சீன கப்பல்களை அங்கிருந்து செல்லும்படி இந்திய கடற்படையினர் உத்தரவிடுவார்கள்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X