பிரதமருக்கு பிறந்தநாள் வாழ்த்து; நேரில் சந்திக்க போரிஸ் ஜான்சன் விருப்பம்| Dinamalar

பிரதமருக்கு பிறந்தநாள் வாழ்த்து; நேரில் சந்திக்க போரிஸ் ஜான்சன் விருப்பம்

Updated : செப் 17, 2020 | Added : செப் 17, 2020 | கருத்துகள் (1)
Share
லண்டன்: பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்த, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், விரைவில் மோடியை நேரில் சந்திக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு டிச., மாதம் 31ம் தேதி ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகியது. இதையடுத்து, இந்தியாவுடன் இலவச பொருளாதார ஒப்பந்தம் கையெழுத்திட போரிஸ் ஜான்சன் ஆவலாக உள்ளார். இதற்காக பிரதமர் மோடியை

லண்டன்: பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்த, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், விரைவில் மோடியை நேரில் சந்திக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.



latest tamil news




கடந்த ஆண்டு டிச., மாதம் 31ம் தேதி ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகியது. இதையடுத்து, இந்தியாவுடன் இலவச பொருளாதார ஒப்பந்தம் கையெழுத்திட போரிஸ் ஜான்சன் ஆவலாக உள்ளார். இதற்காக பிரதமர் மோடியை விரைவில் நேரில் சந்திக்க அவர் விரும்பம் தெரிவித்தார்.

ஆனால், கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மோடி -ஜான்சன் சந்திப்பு தள்ளிப் போடப்பட்டுள்ளது. இருநாடுகளுக்கும் இடையே விர்ச்சுவல் ரியாலிட்டி மீட்டிங் மட்டுமே நடைபெற்று வருகிறது. 2018ம் ஆண்டு கடைசியாக காமன்வெல்த் ஒப்பந்தத்தின் போது லண்டனில் பிரதமர் மோடியும் போரிஸ் ஜான்சன் சந்தித்து பேசினர்.


latest tamil news





இந்நிலையில் இன்று பிரதமர் மோடிக்கு போரிஸ் ஜான்சன் பிறந்தநாள் வாழ்த்தை டுவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். அதில், விரைவில் மோடியை சந்திக்க வேண்டும் எனத் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X