ரஷ்ய கொரோனா தடுப்பூசி மருந்தால் 7ல் ஒருவருக்கு பக்கவிளைவு| Dinamalar

ரஷ்ய கொரோனா தடுப்பூசி மருந்தால் 7ல் ஒருவருக்கு பக்கவிளைவு

Updated : செப் 17, 2020 | Added : செப் 17, 2020 | கருத்துகள் (2)
Share
மாஸ்கோ: ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி மருந்தால் 7 ல் ஒருவருக்கு பக்கவிளைவு ஏற்படுவது உறுதியாகி உள்ளது.உலக நாடுகள் கொரோனாவுக்கான தடுப்பூசி மருந்தினை கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. பல நாடுகளில் தடுப்பூசி மருந்துகள் பரிசோதனையில் இருந்து வருகின்றன.இந்நிலையில் ரஷ்யா உலகிலேயே முதலாவதாக கொரோனா தடுப்பூசி மருந்தினை பதிவு செய்தது. இம்மருந்திற்கு
russian corona vaccine, side effect, one in 7, sputnik -5, ரஷ்ய கொரோனா தடுப்புமருந்து, பக்கவிளைவு, 7 ல் ஒருவருக்கு, பாதிப்பு,

மாஸ்கோ: ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி மருந்தால் 7 ல் ஒருவருக்கு பக்கவிளைவு ஏற்படுவது உறுதியாகி உள்ளது.

உலக நாடுகள் கொரோனாவுக்கான தடுப்பூசி மருந்தினை கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. பல நாடுகளில் தடுப்பூசி மருந்துகள் பரிசோதனையில் இருந்து வருகின்றன.இந்நிலையில் ரஷ்யா உலகிலேயே முதலாவதாக கொரோனா தடுப்பூசி மருந்தினை பதிவு செய்தது. இம்மருந்திற்கு ‛ஸ்புட்னிக்-5' என்று பெயரிடப்பட்டுள்ளது.

ஆனால், ஸ்புட்னிக்-5 செலுத்தப்பட்ட 7 ல் ஒருவருக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.உடல் சோர்வு, உடல்வெப்பம் அதிகரிப்பு, தசைவலி போன்ற பிரச்னைகள் ஏற்படுவதாக சொல்லப்படுகிறது. இத்தகவலை ரஷ்ய சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ தெரிவித்துள்ளார்.


latest tamil news



இந்தியாவில் ‛ஸ்புட்னிக்-5' மருந்து உற்பத்தி செய்ய ரஷ்ய விருப்பம் தெரிவித்துள்ள நிலையில் இம்மருந்தினால் பக்கவிளைவுகள் ஏற்படும் சூழ்நிலை இருப்பதால், இம்மருந்து கொரோனா நோயாளிகளுக்கு பாதுகாப்பனதாக இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X