அமெரிக்காவின் புளோரிடா, அலபாமா மாகாணங்களை பந்தாடிய சல்லி புயல்| Dinamalar

அமெரிக்காவின் புளோரிடா, அலபாமா மாகாணங்களை பந்தாடிய சல்லி புயல்

Updated : செப் 17, 2020 | Added : செப் 17, 2020 | கருத்துகள் (2)
Share
டல்லாஹாஸெ: அமெரிக்காவில் வீசிய சல்லி புயலால் புளோரிடா மற்றும் அலபாமா மாகாணங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. மணிக்கு 115 கி.மீ., வேகத்தில் அலபாமா மற்றும் புளோரிடா கடற்கரையை புதன் காலை கடந்த புயலால் மாகாணங்களில் பல பகுதிகளில் அதிகனமழை கொட்டித்தீர்த்தது.பல இடங்களில் சாலைகளில் 5 அடிக்கும் அதிகமான உயரத்தில் வெள்ளம் பெருக்கெடுத்ததால் வாகனங்கள் அடித்துச்

டல்லாஹாஸெ: அமெரிக்காவில் வீசிய சல்லி புயலால் புளோரிடா மற்றும் அலபாமா மாகாணங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. மணிக்கு 115 கி.மீ., வேகத்தில் அலபாமா மற்றும் புளோரிடா கடற்கரையை புதன் காலை கடந்த புயலால் மாகாணங்களில் பல பகுதிகளில் அதிகனமழை கொட்டித்தீர்த்தது.



latest tamil news



பல இடங்களில் சாலைகளில் 5 அடிக்கும் அதிகமான உயரத்தில் வெள்ளம் பெருக்கெடுத்ததால் வாகனங்கள் அடித்துச் செல்லப்டட்டன. கடற்கரைப் பகுதிகளில் 46 செ.மீ., அதிகமாக மழை கொட்டியது. 5 லட்சத்திற்கும் அதிகமான வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சூறாவளி மெதுவாக நகர்ந்ததால் மழை அதிக அளவு பெய்துள்ளது. பல இடங்களில் 89 செ.மீ., க்கும் அதிகமாக மழை பெய்ததாக கூறப்படுகிறது.


latest tamil news



சில இடங்களில் 169 கி.மீ., வேகத்தில் வீசிய காற்றால் மரங்கள் வேரோடு சாய்ந்தன, மின்கம்பங்கள், வீட்டுக் கூரைகள் பறந்தன. புயலால் இரு மாகாணங்களிலும் 200 முதல் 300 கோடி அமெரிக்க டாலர்கள் அளவிற்கு சேதம் ஆகியிருக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X