விவசாய மசோதாவுக்கு எதிர்ப்பு :மத்திய அமைச்சர் திடீர் ராஜினாமா?| Dinamalar

விவசாய மசோதாவுக்கு எதிர்ப்பு :மத்திய அமைச்சர் திடீர் ராஜினாமா?

Updated : செப் 17, 2020 | Added : செப் 17, 2020 | கருத்துகள் (11)
Share
புதுடில்லி : விவசாய மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய உணவு பாதுகாப்புத்துறை அமைச்சர் ஹர்சிம்ரத் பாதல் தனது அமைச்சர் பதவியை திடீர் என ராஜினாமா செய்துள்ளார். மத்தியில் ஆளும் பா.ஜ. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஷிரோமணி அகாலிதளம் கட்சி (எஸ்ஏஎடி)யை சேர்ந்தவர் ஹர்சிம்ரத் கவுர் பாதல். இவர் பிரதமர் மோடி அமைச்சரவையில் உணவு

புதுடில்லி : விவசாய மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய உணவு பாதுகாப்புத்துறை அமைச்சர் ஹர்சிம்ரத் பாதல் தனது அமைச்சர் பதவியை திடீர் என ராஜினாமா செய்துள்ளார்.



latest tamil news



மத்தியில் ஆளும் பா.ஜ. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஷிரோமணி அகாலிதளம் கட்சி (எஸ்ஏஎடி)யை சேர்ந்தவர் ஹர்சிம்ரத் கவுர் பாதல். இவர் பிரதமர் மோடி அமைச்சரவையில் உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சராக இருந்து வந்தார். கடந்த ஜூன் மாதம் 5-ம் தேதி மத்திய அரசு விவசாயிகளுக்கான மசோதாவை அறிமுகம் செய்தது. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் தற்போது பார்லியில் மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. கடந்த 14ம் தேதி துவங்கிய கூட்டத்தொடர் வரும் அக்.,ஒன்றாம் தேதி வரை நடக்க உள்ளது. இந்நிலையில் இன்று (17 ம் தேதி) பார்லியில் விவசாயிகள் குறித்த மசோதா மீதான விவாதம் நடைபெற்றது. அதற்கு முன்னதாக தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதத்தை பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தார்.


latest tamil news



இது குறித்து அவர் கூறுகையில் பா.ஜ., கொண்டுவந்துள்ள விவசாயம் குறித்த மசோதா வேளாண்துறையில் பெரிய சீர்திருத்தம் என கூறுகிறது. ஆனால் பல வாரங்களாக போராட்டங்களை நடத்தி வரும் பஞ்சாப் , ஹரியானா மாநில விவசாயிகளை இந்த மசோதா வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. பஞ்சாப் மாநிலஅரசுகள் மேற்கொண்ட 50 ஆண்டுகால கடின உழைப்பை "அழிக்கும்" என்றார்.

மேலும் எனது கணவரும் கட்சித் தலைவருமான சுக்பீர் பாதல், தொடர்ந்து மத்திய அரசுக்கும் பாஜகவுக்கும் ஆதரவளிப்பார்கள், ஆனால் விவசாயிகளுக்கு எதிரான அரசியலை" எதிர்ப்பார்கள் என்றார்.


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X