சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த வழிகாட்டி நெறிமுறைகள் வேண்டும்

Updated : செப் 19, 2020 | Added : செப் 17, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
புதுடில்லி :சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தவே வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும்' என, மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் கூறியுள்ளது. பதில் மனு தாக்கல்'சுதர்ஷன் டிவி' என்ற தனியார் 'டிவி சேனலில்' ஒளிபரப்பாக உள்ள ஒரு நிகழ்ச்சியின் முன்னோட்டம் சமீபத்தில் வெளியிடப்பட்டது.அதில், 'சிவில் சர்வீசஸ் பணியிடங்களை ஆக்கிரமிக்க முஸ்லிம்கள் சதி செய்கின்றனர்' என,
சமூக ஊடகங்கள், கட்டுப்படுத்த வழிகாட்டி நெறிமுறைகள்

புதுடில்லி :சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தவே வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும்' என, மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் கூறியுள்ளது.


பதில் மனு தாக்கல்

'சுதர்ஷன் டிவி' என்ற தனியார் 'டிவி சேனலில்' ஒளிபரப்பாக உள்ள ஒரு நிகழ்ச்சியின் முன்னோட்டம் சமீபத்தில் வெளியிடப்பட்டது.அதில், 'சிவில் சர்வீசஸ் பணியிடங்களை ஆக்கிரமிக்க முஸ்லிம்கள் சதி செய்கின்றனர்' என, குறிப்பிடப்பட்டிருந்தது.இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப இடைக்கால தடை விதித்துஉள்ளது. இது போன்ற 'டிவி சேனல்'களை கட்டுப்படுத்த எடுக்க உள்ள நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.அதன்படி, மத்திய செய்தி, ஒலிபரப்பு துறை சார்பில், பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் கூறியுள்ளதாவது:பத்திரிகை மற்றும் டிவி ஊடகங்களுக்கு ஏற்கனவே சில வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளன. அவற்றைக் கட்டுப்படுத்த வழிகளும் உள்ளன.


வழிமுறை

அதே நேரத்தில் பத்திரிகை சுதந்திரம் மற்றும் பத்திரிகைகளின் பொறுப்பு குறித்து விவாதிக்கப்பட வேண்டியுள்ளது. இந்தப் பிரச்னை குறித்து பார்லி.,யில் ஏற்கனவே விவாதிக்கப்படுகிறது. நீதிமன்றத்திலும் விவாதம் நடந்து வருகின்றது.அதனால், இந்த வழக்கில், குறிப்பிட்ட தனியார், 'டிவி' குறித்து மட்டுமே விசாரணை நடத்தலாம்.

ஆனால், ஊடகங்கள் தொடர்பாக விசாரிக்க நீதிமன்றம் விரும்பினால், சமூக ஊடகங்கள் குறித்து விசாரித்து, அவற்றைக் கட்டுப்படுத்த வழிமுறைகள் வகுக்கலாம்.சமூக ஊடகங்களில் அதிக அளவில் பொய் செய்திகளும், வெறுப்பு ஏற்படுத்தும் செய்திகளும் வெளியாகின்றன. வேகமாக பரவுவதுடன், சமூகத்தில் அதிக பாதிப்புகளையும், சமூக ஊடகங்கள் ஏற்படுத் துகின்றன. அதனால், நீதிமன்றம் விரும்பினால், அது தொடர்பாக விவாதிக்கலாம். இவ்வாறு, பதில் மனுவில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
moodi masthan beembai - Baliyal Jalsa Party kovai,இந்தியா
18-செப்-202014:32:07 IST Report Abuse
moodi masthan beembai /சமூக ஊடகங்கள் குறித்து விசாரித்து, அவற்றைக் கட்டுப்படுத்த வழிமுறைகள் வகுக்கலாம்./
Rate this:
moodi masthan beembai - Baliyal Jalsa Party kovai,இந்தியா
19-செப்-202000:34:12 IST Report Abuse
moodi masthan beembaiசமூக ஊடகங்களில் அதிக அளவில் பொய் செய்திகளும், வெறுப்பு ஏற்படுத்தும் செய்திகளும் வெளியாகின்றன. வேகமாக பரவுவதுடன், சமூகத்தில் அதிக பாதிப்புகளையும், சமூக ஊடகங்கள் ஏற்படுத் துகின்றன./...
Rate this:
Cancel
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
18-செப்-202013:38:11 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN தனியார் தொலைகாட்சிகளுக்கு கட்டுப்பாடு கொண்டுவரனும் .பொய் செய்தி பரபுரைகள் செய்தால் உரிமம் ரத்து செய்யனும்.இரவு பூரா ஒளி ஒலி பரப்புவதை அதாவது இரவு புரோகிராம்களை தடை செய்யனும் இரவு பத்து மணியுடன் ஏறகட்டச்செய்திடனும் ...செய்தி சேனல்களை கட்டுப்படுத்தனும்.
Rate this:
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
18-செப்-202011:28:23 IST Report Abuse
ஆரூர் ரங் பிரிவினைவாதிகள் நகர நக்ஸல்களுக்கு மட்டும் கருத்துசுதந்திரம் கொடுத்தால் போதும் .மற்றவர்களுக்குக் கொடுத்து சமூக நீதியைக் கெடுக்கக்கூடாது இப்படிக்கு பப்பு மற்றும் சுடலை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X