பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் உழைப்பாளி மருத்துவமனை துவக்கம்

Updated : செப் 17, 2020 | Added : செப் 17, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
சென்னை:சென்னை, சாலிகிராமம், அருணாச்சலம் சாலையில், 'உழைப்பாளி' என்ற பெயரில், புதிய மருத்துவமனையை, சித்தா டாக்டர் வீரபாபு நேற்று துவக்கினார். 'இங்கு சித்தா, அலோபதியுடன் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிக்கப்படும்; 10ரூபாய் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும்' என, அவர் அறிவித்துள்ளார். சென்னை மருத்துவ கல்லுாரியின் மூடநீக்கியல் துறை முன்னாள் இயக்குனர் அன்பழகன், பொது

சென்னை:சென்னை, சாலிகிராமம், அருணாச்சலம் சாலையில், 'உழைப்பாளி' என்ற பெயரில், புதிய மருத்துவமனையை, சித்தா டாக்டர் வீரபாபு நேற்று துவக்கினார். 'இங்கு சித்தா, அலோபதியுடன் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிக்கப்படும்; 10ரூபாய் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும்' என, அவர் அறிவித்துள்ளார்.



latest tamil news



சென்னை மருத்துவ கல்லுாரியின் மூடநீக்கியல் துறை முன்னாள் இயக்குனர் அன்பழகன், பொது மருத்துவ டாக்டர்கள் விஜய், மணிகண்டன் ஆகியோர், அலோபதி சிகிச்சை அளிக்கின்றனர்.மருத்துவமனையில், தினமும் காலை, 9:00 முதல் இரவு, 9:00 மணி வரை சிகிச்சை அளிக்கப்படும். சித்தா, அலோபதி என, இரண்டு சிகிச்சைகளையும் ஒரே இடத்தில் ஏழை, எளிய மக்கள் பெறலாம்.


latest tamil news



டாக்டர்கள் அளிக்கும் பரிந்துரை சீட்டு அடிப்படையில், மருந்தகங்களில் மருந்துகளை வாங்கி கொள்ளலாம். சித்தா மருந்துகள், மருத்துவமனை வளாகத்திலேயே கிடைக்கும்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajan - Gaborone,போஸ்ட்வானா
19-செப்-202014:39:36 IST Report Abuse
Rajan இதற்கு ஆதரிக்கும் வகையில் தீமுக-வினர் "தனியார் (அதிக கட்டணம் வசூலிக்கும்) உயர் நிலை ஆஸ்பத்திரிகள் வேண்டாம் போடா " என ட்வீட் போடுவார்களா ????
Rate this:
Cancel
18-செப்-202015:26:43 IST Report Abuse
IndiaTamilan Kumar (Tamilagathil  Nallavarkal  Aatchikku VARAVENDUM ) உண்மையாக உழைப்பவர்களுக்கு உழைப்பாளி மருத்துவமனை ஒரு வர பிரசாதம்.
Rate this:
Cancel
Rajasekaran CJ - bangalore,இந்தியா
18-செப்-202013:16:00 IST Report Abuse
Rajasekaran CJ Good effort
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X