சென்னையில் உழைப்பாளி மருத்துவமனை துவக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் உழைப்பாளி மருத்துவமனை துவக்கம்

Updated : செப் 17, 2020 | Added : செப் 17, 2020 | கருத்துகள் (10)
Share
சென்னை:சென்னை, சாலிகிராமம், அருணாச்சலம் சாலையில், 'உழைப்பாளி' என்ற பெயரில், புதிய மருத்துவமனையை, சித்தா டாக்டர் வீரபாபு நேற்று துவக்கினார். 'இங்கு சித்தா, அலோபதியுடன் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிக்கப்படும்; 10ரூபாய் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும்' என, அவர் அறிவித்துள்ளார். சென்னை மருத்துவ கல்லுாரியின் மூடநீக்கியல் துறை முன்னாள் இயக்குனர் அன்பழகன், பொது

சென்னை:சென்னை, சாலிகிராமம், அருணாச்சலம் சாலையில், 'உழைப்பாளி' என்ற பெயரில், புதிய மருத்துவமனையை, சித்தா டாக்டர் வீரபாபு நேற்று துவக்கினார். 'இங்கு சித்தா, அலோபதியுடன் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிக்கப்படும்; 10ரூபாய் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும்' என, அவர் அறிவித்துள்ளார்.



latest tamil news



சென்னை மருத்துவ கல்லுாரியின் மூடநீக்கியல் துறை முன்னாள் இயக்குனர் அன்பழகன், பொது மருத்துவ டாக்டர்கள் விஜய், மணிகண்டன் ஆகியோர், அலோபதி சிகிச்சை அளிக்கின்றனர்.மருத்துவமனையில், தினமும் காலை, 9:00 முதல் இரவு, 9:00 மணி வரை சிகிச்சை அளிக்கப்படும். சித்தா, அலோபதி என, இரண்டு சிகிச்சைகளையும் ஒரே இடத்தில் ஏழை, எளிய மக்கள் பெறலாம்.


latest tamil news



டாக்டர்கள் அளிக்கும் பரிந்துரை சீட்டு அடிப்படையில், மருந்தகங்களில் மருந்துகளை வாங்கி கொள்ளலாம். சித்தா மருந்துகள், மருத்துவமனை வளாகத்திலேயே கிடைக்கும்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X