டிரம்ப் மீது அமெரிக்க மாடல் பாலியல் புகார்; தேர்தல் நேரத்தில் மேலும் நெருக்கடி..!| Dinamalar

டிரம்ப் மீது அமெரிக்க மாடல் பாலியல் புகார்; தேர்தல் நேரத்தில் மேலும் நெருக்கடி..!

Updated : செப் 17, 2020 | Added : செப் 17, 2020 | கருத்துகள் (4)
Share
வாஷிங்டன்: அமெரிக்காவில் வரும் நவம்பர் மூன்றாம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்குவதால் ஜனநாயகம் மற்றும் குடியரசு கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் மும்முரம் காட்டி வருகின்றன.இந்நிலையில் ஏமி டோரிஸ் என்கிற மாடல் நடிகை அமெரிக்க அதிபர் டிரம்ப்மீது ஒரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். 1997 ஆம் ஆண்டு நியூயார்க்கில் நடந்த டென்னிஸ் டோர்னமெண்ட்போது
trump, emi doris, american model, sex, complaint, டிரம்ப், அமெரிக்க மாடல், ஏமி டோரிஸ், பாலியல் புகார்

வாஷிங்டன்: அமெரிக்காவில் வரும் நவம்பர் மூன்றாம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்குவதால் ஜனநாயகம் மற்றும் குடியரசு கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் மும்முரம் காட்டி வருகின்றன.

இந்நிலையில் ஏமி டோரிஸ் என்கிற மாடல் நடிகை அமெரிக்க அதிபர் டிரம்ப்மீது ஒரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். 1997 ஆம் ஆண்டு நியூயார்க்கில் நடந்த டென்னிஸ் டோர்னமெண்ட்போது மிகப்பெரிய ரியல் எஸ்டேட் தொழில் அதிபராக இருந்த டொனால்ட் ட்ரம்ப் அந்நிகழ்வில் கலந்து கொண்டார். அதில் ஏமியும் கலந்து கொண்டுள்ளார். அப்போது டிரம்ப் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் தனது அனுமதி இல்லாமல் முத்தம் கொடுக்க முயன்றதாகவும் 23 ஆண்டுகள் கழித்து சரியாக அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்னர் புகார் அளித்துள்ளார் ஏமி.


latest tamil newsஇந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார் டிரம்ப். தனது பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிப்பதாக திட்டமிட்டு எதிர்க்கட்சிகள் இவரை ஏவிவிட்டிருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். கார்டியன் பத்திரிகைக்குப் பேட்டி அளித்த ஏமி தன் விருப்பத்திற்கு மாறாக டிரம்ப் தன்னை இறுக அனைத்ததாகவும் முத்தமிட்டதாகவும் அவரது பிடியில் இருந்து தான் வெளியே வர முயன்றபோது முடியாமல் போனது எனவும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் இச்செய்தி விவாதத்துக்கு உள்ளாகி உள்ளது.பிரபலங்களுக்கு அவ்வப்போது இதுபோன்ற பாலியல் குற்றச்சாட்டு வருவது தற்போது உள்ள சூழ்நிலையில் வாடிக்கையாகிவிட்டது. இவர்கள் உண்மையாக தவறு செய்திருந்தாலும் அல்லது செய்யவில்லை என்றாலும் இவர்களுக்கு நெருக்கடி கொடுக்க இவ்வாறு அவ்வப்போது பாலியல் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுவதுண்டு. தற்போது தேர்தல் சமயத்தில் டிரம்புக்கு ஏமி முன்வைத்துள்ள இந்த பாலியல் குற்றச்சாட்டு பெரும் தலைவலியாக அமைந்துள்ளதை மறுப்பதற்கில்லை.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X