அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க.,ஆட்சிக்கு வந்தவுடன்'நீட்' தேர்வு ரத்து

Updated : செப் 19, 2020 | Added : செப் 17, 2020 | கருத்துகள் (125)
Share
Advertisement
சென்னை : 'அலுவல் மொழியாக தமிழும், ஆங்கிலமும் தொடர்வதை போலவும், ஜல்லிக்கட்டுக்கு ஒப்புதல் பெற்றது போலவும், தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன், நீதிமன்ற ஆதரவை பெற்று, 'நீட்' தேர்வு ரத்து செய்யப்படும்' என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:நீட் தேர்வை, தடுத்து நிறுத்தியது, கருணாநிதி தலைமையிலான தி.மு.க., அரசு. நீட் தேர்வை கொண்டு வந்தது பா.ஜ., கட்சி. அதை ஆதரித்த
தி.மு.க., ஆட்சி, நீதிமன்ற ஆதரவை பெற்று, 'நீட்' தேர்வு ரத்து

சென்னை : 'அலுவல் மொழியாக தமிழும், ஆங்கிலமும் தொடர்வதை போலவும், ஜல்லிக்கட்டுக்கு ஒப்புதல் பெற்றது போலவும், தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன், நீதிமன்ற ஆதரவை பெற்று, 'நீட்' தேர்வு ரத்து செய்யப்படும்' என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:
நீட் தேர்வை, தடுத்து நிறுத்தியது, கருணாநிதி தலைமையிலான தி.மு.க., அரசு. நீட் தேர்வை கொண்டு வந்தது பா.ஜ., கட்சி. அதை ஆதரித்த கட்சி அ.தி.மு.க., அலுவல் மொழியாக தமிழும், ஆங்கிலமும் தொடரும் என, தமிழகத்திற்கு விலக்கு பெறப்பட்டது.

ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தபோது, தி.மு.க., ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பிய ஜல்லிக்கட்டு மசோதாவிற்கு, ஜனாதிபதி ஒப்புதல் பெறப்பட்டது. அதேபோல், தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன், சட்ட வழிகளை பயன்படுத்தி, சட்டசபையின் அதிகாரத்தை பயன்படுத்தி, தேவைப்பட்டால், நீதிமன்றங்களின் ஆதரவை பெற்று, நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


மோடிக்கு வாழ்த்து



அத்துடன், பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். வாழ்த்து செய்தியில், 'பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுளும் பெற்று, நாட்டிற்கான உங்களது பணி தொடர வாழ்த்துகிறேன்' என, ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (125)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gnanam - Nagercoil,இந்தியா
24-செப்-202019:05:45 IST Report Abuse
Gnanam நீட் தேர்வை ரத்து செய்ய தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால் போதாது. டெல்லியில் ஆட்சிக்கு வரவேண்டும். நீட் என்றாலே நாட்டுக்கு மொத்தம் உள்ள ஒரு தேர்வு. நினைவிருக்கட்டும் ஐயா.
Rate this:
Cancel
sivajothi.s - trichy,இந்தியா
21-செப்-202013:26:15 IST Report Abuse
sivajothi.s நீட் தேர்வு இல்லை என்றால் எந்த ஒரு ஏழை மாணவர்களுக்கும் மருத்துவர் படிப்புக்கு வாய்ப்பு கிடைக்க போவதில்லை. பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே உருவாக்கப்பட்ட பட்டப்படிப்பாக மாறிவிடும். அது அரசியல் வாதிகளுக்கு அறுவடை காலமாக இருக்கும். நீட் தேர்விற்கு தயாராகும் வகையில் கிராமம் தோறும் உள்ள மாணவர்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்தி தரவேண்டியது அரசின் கடமையாக இருக்க வேண்டும். தனியார் நடத்தும் வகுப்புகளை தடை செய்யவேண்டும்.
Rate this:
Cancel
Meenaksisundaram N S - bangalore,இந்தியா
20-செப்-202004:36:18 IST Report Abuse
Meenaksisundaram N S அது சரி ,-ஒரு பேச்சுக்கு இவங்க வந்தாங்கன்னாலும் ஒரு தீர்மானம் (?) வேணும்னா சட்ட சபைலே நிறைவேற்றலாம் தவிர வேறென்ன செய்ய முடியும் ?உச்ச நீதி மன்ற தீர்ப்பை மீரா முடியுமா?இது மக்களை ஏய்ய்க்கும் வேலை தானே?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X